பிளஸ் 2 வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுடன் ஆளுநர் ஆர் .என் ரவி சந்திப்பு – அடுத்தக்கட்ட இலக்கில் கவனம் செலுத்த அறிவுறுத்தல்

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில்அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் அடுத்த கட்ட பயண இலக்கில் கவனம் செலுத்த வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தியுள்ளார். சென்னை ராஜ்பவனில் 12 ஆம் வகுப்பு…

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில்அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் அடுத்த கட்ட பயண இலக்கில் கவனம் செலுத்த வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை ராஜ்பவனில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவிகள் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் வாழ்த்து பெற்றனர். அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, இளைய தலைமுறையினர் செல்போன்களை தேவையான அளவு மட்டும் பயன்படுத்த வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

மாணவ – மாணவிகள் கடினமாக உழைத்தால் மட்டும் போதாது; தங்கள் இலக்கில் உறுதியாக இருக்க வேண்டும் என்று அ றிவுறுத்திய ஆளுநர், Charted accountant படிப்புக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக தெரிவித்தார். மருத்துவ படிப்பை படிக்க நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றால் கல்வி செலவை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்றும் ஆளுநர் கூறினார். டாக்டர் மற்றும் வழக்கறிஞர் படிக்க விருப்பம் தெரிவித்த மாணவர்களுக்கு அதற்கான முயற்சிகளை தொடங்க அறிவுறுத்தினார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.