டிவிட்டரில் பரவி வரும் வீடியோ ஒன்றில் நடைபாதை இடிந்து விழும் போது, இளைஞர் அதனை கடந்து சென்று நூலிழையில் தப்பித்தது, பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் பரவி வருவது பேசு பொருளாக மாறி விடுகிறது. எங்கயே இருந்து கொண்டு செல்போன் மூலமாக பதிவிடும் சிறிய வீடியோ அல்லது புகைப்படங்கள் சில நேரங்களில் உலக அளவில் பேசப்படுகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அவ்வாறு டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பேன்ற சமூக வலைத்தளங்களில் எண்ணற்ற பொழுது போக்குகளை தினந்தோறும் பார்க்கின்றோம். சிலர் சமூக வலைத்தளங்கள் மூலம் பிரபலமாகி திரைப்படங்களில் நடிக்கும் கட்டத்தை எட்டி விடுகின்றனர். ஒவ்வொருவரும், மகிழ்ச்சிகளையும், துக்கத்தையும், அதிர்ஷ்டத்தையும் தெரியப்படுத்தும் ஒரு இடமாக சமூக வலைத்தளங்கள் உருவாகிவிட்டன.
அந்த வரிசையில் டிவிட்டர் பக்கத்தில் பரவி வரும் ஒரு வீடியோவில் இளைஞர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பித்துள்ளார். சகார் என்ற டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் நடந்து சென்றபோது, எதிர்பாராத விதமாக நடைபாதை பெயர்ந்து விழுந்தது. அப்போது, நூலிழையில் அந்த இளைஞர் அதனை கடந்ததால் படுகாயமின்றி உயிர் தப்பினார்.
இது அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. இதனை அந்த பதிவர் பதிவிட்டதோடு, எமன் மதிய உணவு இடைவெளிக்கு சென்றபோது நிகழ்ந்த சம்பவம் என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ காட்சிக்கு கமெண்ட் பதிவிட்டுள்ள சிலர், புதிதாக போடப்பட்டுள்ள நடைபாதையை கவனிக்காமல் அவர் நடந்து சென்றதால் இடிந்து விழுந்ததாகவும், புதிய நடைபாதையை சேதப்படுத்தியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளனர்.
-இரா.நம்பிராஜன்