சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டு சிறை; ஈரோடு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு விதித்துள்ளது. ஈரோடு பழையபாளையம் இந்திரா நகர் வீதியில் வசித்து வரும் ரேகா பானு…

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு விதித்துள்ளது.

ஈரோடு பழையபாளையம் இந்திரா நகர் வீதியில் வசித்து வரும் ரேகா பானு அழகுநிலையம் வைத்துள்ளார். ரேகா பானுவிற்கு ஆண் நண்பர்கள் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனது ஆண் நண்பரான ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சீனிவாசலுவிற்கு ஈரோட்டை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவியை ரேகா பானு அறிமுகப்படுத்தியுள்ளார்.

இதையடுத்து, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகளை கூறி, கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிறுமியை ஈரோட்டில் இருந்து கொடிவேரி அணைக்கு சீனிவாசலு அழைத்து சென்றுள்ளார். பின்னர் ஆந்திராவிற்கு கடத்தி சென்று, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். இவ்வழக்கில் சீனிவாசலுவிற்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், உடந்தையாக இருந்த ரேகா பானுவிற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து ஈரோடு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு விதித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply