வாகன திருட்டில் ஈடுபட்ட இளைஞர்: சரமாரியாக தாக்கிய மக்கள்

கரூரில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இளைஞரை, அப்பகுதி மக்கள் பிடித்து தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. கரூர் மாவட்டம் உள் வீரராக்கியத்தை சேர்ந்த பாஸ்கரன் என்பவர் சில தினங்களுக்கு முன் அப்பகுதியில் உள்ள தனது…

கரூரில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இளைஞரை, அப்பகுதி மக்கள் பிடித்து தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

கரூர் மாவட்டம் உள் வீரராக்கியத்தை சேர்ந்த பாஸ்கரன் என்பவர் சில தினங்களுக்கு முன் அப்பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் பணிபுரிந்துள்ளார். அப்போது, ஸ்கூட்டரில் வந்த நிஷாந்த் என்பவர் பாஸ்கரனின் விலைஉயர்ந்த இரு சக்கர வாகனத்தை ஓட்டிப்பார்ப்பதாக கூறி கேட்டுள்ளார். இதனையடுத்து பாஸ்கரன் இரு சக்கர வாகனத்தை கொடுத்ததும், நிஷாந்த் அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார்.

நிஷாந்த் விட்டுச்சென்ற ஸ்கூட்டர் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், திருச்சி மாவட்டம் மணச்சநல்லூரை சேர்ந்த செந்தமிழ் என்பவரிடம் இருந்து திருடப்பட்டதை கண்டறிந்து ஒப்படைத்தனர். இதனையடுத்து இருசக்கர வாகனங்களை திருடிச்சென்று தலைமறைவாக இருந்த நிஷாந்த்தை தேடி வந்தனர். இந்நிலையில், நிஷாந்த்தை பிடித்த பாஸ்கரன் மற்றும் அவரது நண்பர்கள், வீரராக்கியம் மதுரைவீரன் கோயில் அருகே சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இந்நிலையில், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதனால், தாக்குதலில் காயமடைந்த நிஷாந்த் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தலைமறைவாக உள்ள பாஸ்கரன் மற்றும் அவரது நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.