உத்தரப்பிரதேச தேர்தல்: பிற்பகல் நிலவரம்

உத்தரப் பிரதேசத்தில் இன்று ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் , பிற்பகல் 3 மணி வரை பதிவான வாக்கு சதவீதம் வெளியாகியுள்ளது.   உத்தரப்பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக…

உத்தரப் பிரதேசத்தில் இன்று ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் , பிற்பகல் 3 மணி வரை பதிவான வாக்கு சதவீதம் வெளியாகியுள்ளது.

 

உத்தரப்பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல் நான்கு கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் இன்று ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

12 மாவட்டங்களுக்கு உட்பட்ட 61 இடங்களில் தேர்தல் நடைபெறுகிறது. அதில், அயோத்தி, ப்ரயாக்ராஜ், ரேபெரலி, அமேதி உள்ளிட்ட முக்கிய தொகுதிகள் அடங்கும். 2 கோடிக்கு அதிகமான வாக்காளர்கள், 693 வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்ய உள்ளனர். இந்நிலையில் மாலை 3 மணி நிலவரப்படி 46 புள்ளி 28 சதவீத வாக்குகள் பதிவாகிவுள்ளதாக மாநிலம் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.