கோடநாடு எஸ்டேட் தேயிலைத்தூள் கிடங்கில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது குறித்து, சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் பங்களாவில் 2017 ம்
ஆண்டு ஏப்ரல் 24 ம் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இந்த கொலை
மற்றும் கொள்ளை சம்மந்தமாக விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் ஆவணங்கள்
கொள்ளையடிக்கப்பட்டதாக வழக்கு பதியப்பட்டு தற்போது நீலகிரி மாவட்ட அமர்வு
நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில், கோடநாடு எஸ்டேட் தேயிலை தூள் கிடங்கில், கதவு உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடந்துள்ளதாக எஸ்டேட் மேற்பார்வையாளர் புகார் அளித்துள்ளார். இதையடுத்து மேற்பார்வையாளர் அளித்த புகாரில் வழக்கு பதியப்பட்டு விலையுயர்ந்த தேயிலை தூள்பெட்டிகள் உடைக்கப்பட்ட நிலையில் குன்னூர் டிஎஸ்பி சுரேஸ் தலைமையில்விசாரணையானது நடைபெற்று வருகிறது.
இவ்விசாரனையில் தற்போது தட ஆய்வியல் அதிகாரிகளை கொண்டு கை ரேகைகள் பதிவு சேகரித்துள்ள நிலையில், காவல்துறையினர் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதால் எந்த ஒரு விளக்கமும் கூற முடியாது, விசாரணை முழுமையாக நடைபெற்று முடிந்த பிறகு முழு விபரமும் தெரிய வரும் என காவல்துறை தெரிவித்துள்ளது.