“மகா யுத்தம் 2024” என்ற தலைப்பில் நாடாளுமன்ற தேர்தல் செய்திகளை சுவாரஸ்ய வழங்கும் உங்கள் நியூஸ் 7 தமிழ்!

நாடாளுமன்ற தேர்தல் குறித்த சுவாரஸ்ய தகவல்களை “மகா யுத்தம் 2024” என்ற தலைப்பில் இன்று முதல் வழங்குகிறது உங்கள் நியூஸ் 7 தமிழ்.  நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி விட்டது.  ஓரிரு வாரங்களில் தேர்தல் தேதி…

நாடாளுமன்ற தேர்தல் குறித்த சுவாரஸ்ய தகவல்களை “மகா யுத்தம் 2024” என்ற தலைப்பில் இன்று முதல் வழங்குகிறது உங்கள் நியூஸ் 7 தமிழ். 

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி விட்டது.  ஓரிரு வாரங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில்,  நாடே தேர்தலை எதிர்கொள்ள தயாராகிவிட்டது.  தேசிய அளவில்,  பாஜக தலைமையிலான NDA கூட்டணியும்,  காங்கிரஸ் தலைமையிலான INDIA கூட்டணியும் நேரடி போட்டியில் களம் இறங்கியுள்ளன.  இந்நிலையில் இரு கூட்டணியிலும் ஒரு சில கட்சிகள் வெளியேறியதால் சலசலப்பு ஏற்பட்டது.  ஆயினும் அதனை பொருட்படுத்தாமல் 2 கூட்டணியும் தங்கள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன.

கூட்டணி பேச்சுவார்த்தை,  தொகுதி பங்கீடு,  தேர்தல் அறிக்கை தயாரிப்பு,  வேட்பாளர் தேர்வு என அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர களப்பணிகளை தொடங்கியுள்ளன.  வரும் வாரங்களில் அரசியல் களம் மேலும் தகிக்க தொடங்கும் நிலை உள்ளது.

இதனால்,  நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து செய்திகளையும் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி “மகா யுத்தம் 2024” என்ற தலைப்பில் இன்று முதல் ஒளிபரப்பு செய்கிறது. இதில் பிரத்யேகமான பல தகவல்கள்,  அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும் பேட்டிகள் என சுவாரஸ்யமான அனைத்து தகவல்களும் இடம்பெற உள்ளன.

தேர்தல் குறித்த அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியுடன் இணைந்திருங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.