கோஷ்டி மோதல்- வாலிபர் ஓட ஓட வெட்டிக் கொலை

திருப்பத்தூரில் அரசு மருத்துவமனை வளாகத்தில் இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்துார் அருகே கலைஞர் நகரை சேர்ந்த சில வாலிபர்களுக்கும், டிஎம்சி காலனியை சேர்ந்த…

திருப்பத்தூரில் அரசு மருத்துவமனை வளாகத்தில் இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்துார் அருகே கலைஞர் நகரை சேர்ந்த சில வாலிபர்களுக்கும், டிஎம்சி
காலனியை சேர்ந்த சில வாலிபருக்குமிடையே ஒவ்வொரு ஆண்டும் அப்பகுதியில்
நடக்கும் திருவிழாவின் போது மோதல் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று கலைஞர் நகரில் திருவிழா நடந்துள்ளது. அப்போது இரு
தரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து இரவு சுமார் 9 மணியளவில், டிஎம்சி காலனியை சேர்ந்த சிலர் கலைஞர் நகரை சேர்ந்த அண்ணாதுரை என்பவரின் மகன் முகிலனை (22) சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் முகிலனுக்கு ரத்த காயம் ஏற்பட்டது. உடனே முகிலனை
அங்கிருந்தவர்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக
அழைத்துச் சென்றனர்.

ஆனால் ஆத்திரம் தீராத எதிர்கோஷ்டியினர் திருப்பத்துார் அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்த முகிலனை ஓட ஓட வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த கலவரத்தால் மருத்துவமனை வளாகத்தில் இருந்த நோயாளிகள் மற்றும் பொது மக்கள் நாலா புறமாக சிதறியடித்து ஓடினர்.

பின்னர் தகவலறிந்த திருப்பத்துார் நகர போலீசார் விரைந்து வந்து படுகொலை
செய்யப்பட்ட முகிலனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலுார் அரசு
மருத்துவமனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தனர்.

ஆனால் அதற்குள் முகிலனின் தரப்பினர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு
கொலையாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தி உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் முகிலனின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் அவரது உடலை வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அசம்பாவிதங்கள் தவிர்க்க நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அங்கு  குவிக்கப்பட்டு உள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனை வளாகத்தில் நடந்த கொலைவெறி தாக்குதல் சம்பவம் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.