நீங்க நல்லா இருக்கோணும்…

வீரபாண்டிய கட்டபொம்மன், திருப்பூர் குமரன், கப்பலோட்டிய தமிழன் என போராடி சுதந்திரம் பெற்றுத் தந்த தியாகிகளை, நம் கண்முன் நிறுத்திய நடிகர்களில் சிவாஜியின் பங்களிப்பை யாரும் மறக்க இயலாது. அதே நேரத்தில், முறுக்கிய மீசை,…

வீரபாண்டிய கட்டபொம்மன், திருப்பூர் குமரன், கப்பலோட்டிய தமிழன் என போராடி சுதந்திரம் பெற்றுத் தந்த தியாகிகளை, நம் கண்முன் நிறுத்திய நடிகர்களில் சிவாஜியின் பங்களிப்பை யாரும் மறக்க இயலாது. அதே நேரத்தில், முறுக்கிய மீசை, மிரட்டும் விழியுடன் மகாகவி பாரதியை நினைவூட்டிய, தமிழ்த் திரையுலகின் சிறந்த குணச்சித்திர நடிகர்களுள் முக்கியமானவர் எஸ்.வி.சுப்பையா. `கப்பலோட்டிய தமிழன்’ படத்தில் சிவாஜிகணேசன் வ.உ.சிதம்பரனாராக நடிக்க, எஸ்.வி.சுப்பையா மகாகவி பாரதியாராக நடித்தார்.

ஒருமுறை அன்றைய பிரபலமான எஸ்.ஜி கிட்டப்பா, சொந்த ஊரான செங்கோட்டைக்கு வந்த நிலையில், அவர் சென்ற மாட்டுவண்டிக்கு பின்னே ஓடியபடி கிட்டப்பாவின் பாடலை சத்தமிட்டு பாடினார் எஸ்.வி.சுப்பையா. ”நல்ல சாரீரம் உனக்கு, வா என்னுடன்” என கிட்டப்பா சென்னைக்கு அழைத்து வர ஏற்கனவே சிறு வயதிலிருந்தே கலைத்துறையின் மீதான தீராக் காதலால் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார் சுப்பையா. நாடகக் கலையில் கிடைத்த பெயர் எஸ்.வி.சுப்பையாவை திரையுலகுக்கு அழைத்து வந்தது. சிவாஜி கணேசனுடன் எஸ்.வி.சுப்பையா இணைந்து நடித்த ‘கப்பலோட்டிய தமிழன்’, ‘பாவமன்னிப்பு’, ‘இரும்புத்திரை’ உள்ளிட்ட திரைப்படங்கள் பிரபலமடைந்தன.

எம்ஜிஆர் மற்றும் சிவாஜியுடன் இணைந்து நடித்தபோது வசனங்கள் சரியில்லை என்றால் மாற்றச் சொல்லிடும் ஆற்றல் படைத்தவர் சுப்பையா. அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இரு பெரிய நடிகர்களுக்கும் இருந்தது.

காவல் தெய்வம் என்ற பெயரில் சொந்தப்படமெடுத்த சுப்பையாவின் வேண்டுகோளுக்கிணங்க கவுரவ வேடத்தில் நடித்தார் நடிகர் திலகம் சிவாஜி. நடிப்பை தவிர தனக்கு பிடித்தமான தொழில் விவசாயம் என கூறிய சுப்பையா, நாட்டின் முன்னேற்றத்திற்கு விவசாயமே முன்னோடி என உறுதியுடன் நம்பியவர்.

பாலச்சந்தரின் அரங்கேற்றம் திரைப்படத்தில் பிராமணராக, ஆதிபராசக்தி திரைப்படத்தில் அபிராமி பட்டராக 90க்கும் மேற்பட்ட படங்களில் அசைக்கமுடியாத குணச்சித்திர நடிகராக வலம் வந்த சுப்பையா 1980 ஆம் ஆண்டு தனது 57 வயதில் காலமானார்.

இதனையும் படியுங்கள்: சினிமாவில்கூட நம்பமுடியாதது….மேஜர் சுந்தர்ராஜனின் நிஜ வாழ்க்கையில் நடந்த அந்த உண்மைச் சம்பவம்…

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.