34 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சட்டப்பேரவையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் வெற்றி பெற்ற ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் தென்னரசு உள்பட 73 பேர்…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் வெற்றி பெற்ற ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் தென்னரசு உள்பட 73 பேர் போட்டியிட்டனர். இதில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தென்னரசு 43 ஆயிரத்து 923 வாக்குகளும் வாங்கியதன் மூலம் 66 ஆயிரத்து 21 ஓட்டுகள் கூடுதலாகப் பெற்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் வெற்றி பெற்ற ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் எம்.எல்.ஏவாக இன்று பதவியேற்றுக் கொண்டார். சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்ட ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு சபாநாயகர் அப்பாவு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

நிகழ்வில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் திருமாவளவன், துரை வைகோ, ஜவாஹிருல்லா, முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், கே.எஸ் அழகிரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதன் மூலம் 1989-ம் ஆண்டுக்குப் பின் அதாவது 34 ஆண்டுகளுக்குப் பின் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மீண்டும் சட்டப்பேரவைக்குள் உறுப்பினராக சென்றுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.