” இன்ஸ்டாகிராமில் வீடியோ போட்டால் போதும் தற்போது சினிமாவில் வாய்ப்பு கிடைத்து விடுகிறது “ என நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.
தமிழ் திரை உலகில் முன்னணி பாடகியாகவும், நடிகையாகவும் வலம் வருபவர்
ஆன்ட்ரியா. தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் நூற்றுக்கணக்கான பாடல்களை பாடியிருந்தாலும், ஆயிரத்தில் ஒருவன், தரமணி, பச்சைக்கிளி முத்துச்சரம் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.
இந்த சூழலில் கோவையில் ரெட்நூல் நிறுவனத்தின் சார்பில் ஹிந்துஸ்தான் கலைக்கல்லூரியில் ஆன்ட்ரியா இசை நிகழ்ச்சி நடைபெற்றது. வரும் ஜூலை மாதம் 1ம் தேதி நடைபெறும் இந்த இசை நிகழ்ச்சி குறித்து ஆன்ட்ரியா கோவையில் உள்ள தனியார் வணிகவளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் தெரிவித்ததாவது..
“ கோலாலம்பூரில் கடைசியாக இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கோவையில் வரும் 1ம் தேதி இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த கச்சேரி 2 மணி நேரம் நடைபெறுகிறது. இளையராஜா பாடல்களும், நான் பாடிய பாடல்களும் இந்த நிகழ்ச்சியில் இடம் பெறுகிறது.
கோவை எனக்கு மிகவும் பிடித்த ஊர். கோவையில் நல்ல ரசிகர்களை எதிர்பார்த்து இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம். நடிப்பு, பாடல் எதுவுமே ஈசி இல்லை. கடந்த 5 ஆண்டுகள் இசை நிகழ்ச்சியில் சென்றதால் தற்போது ஈசியா பாடுகிறேன் என்றேன். நான் பாடிய பாடல்களில் இதுவரை Who is the hero, Google மற்றும் ஊ சொல்றியா பாடல்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
ஓடிடியில் இதுவரை நான் எந்த சீரியஸூம் நான் நடித்ததில்லை. அதனால் அதுகுறித்து பேசவில்லை எனவும், சமீப காலமாக பெண்களை மையப்படுத்தி வரும்
கதைகள் ஒரு நல்ல ட்ரெண்ட். பர்கானா படத்தின் ஜஸ்டின் பிரபாகர், இசையமைப்பாளர் அஸ்வின் உட்பட தமிழில் பல புதிய இசையமைப்பாளர்களுடன் வேலை செய்து வருகிறேன்.
தற்போது சினிமாவில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைப்பது எளிது, இன்ஸ்டாகிராமில் நான்கு வீடியோ போட்டால் போதும் வாய்ப்பு கிடைத்துவிடும் “ என ஆண்ட்ரியா தெரிவித்தார்.







