உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி – இந்தியா வெண்கல பதக்கத்துடன் வெளியேறியது!

உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் அரையிறுதியில் மலேசியாவிடம் தோற்றதால் இந்திய அணி  வெண்கல பதக்கத்துடன் திருப்தி அடைந்தது. இந்த வெண்கல பதக்கத்தை புள்ளிகள் அடைப்படையில் ஜப்பானுடன் இந்தியா பகிந்து கொள்கிறது. இறுதி போட்டியில் எகிப்தும்…

உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் அரையிறுதியில் மலேசியாவிடம் தோற்றதால் இந்திய அணி  வெண்கல பதக்கத்துடன் திருப்தி அடைந்தது. இந்த வெண்கல பதக்கத்தை புள்ளிகள் அடைப்படையில் ஜப்பானுடன் இந்தியா பகிந்து கொள்கிறது. இறுதி போட்டியில் எகிப்தும் மலேசியாவும் நாளை பலப்பரிட்சை செய்ய உள்ளன.

ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ தனியார் வளாகத்தில் கடந்த 13 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரின் நேற்றைய மூன்றாவது லீக் போட்டியில் இந்தியா ஜப்பான் அணிகள் மோதின. இதில் ஜப்பானை இந்திய அணி 3-1 என வீழ்த்தி அசத்தியது.

ஹாங்காக் – சீன அணியையும், தென்னாபிரிக்க அணியையும் ஏற்கனவே இந்தியா ஒயிட் வாஷ் செய்திருந்த நிலைய்ல், குரூப் B இல் முன்னிலை வகித்தது.

இதனை அடுத்து நேற்றைய தினம் ஜப்பானை 3-1 என்ற புள்ளி கணக்கில் இந்தியா வீழ்த்தியதன் மூலம் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

இதனை தொடர்ந்து இன்று மலேசிய அணியுடனான அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர்கள் அபய் சிங், சவுரவ் கோஷல், ஜோஷ்னா சின்னப்பா என மூவரும் அடுத்தடுத்து தோல்வி அடைந்தனர். இதனால் இந்தியாவை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது மலேசியா. இந்நிலையில் புள்ளிகள் அடிப்படையில் ஜப்பானுடன் இணைந்து இந்திய அணி வெண்கல பதக்கத்தை பகிந்து கொண்டது. இந்நிலையில் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் எகிப்தும் மலேசியாவும் நாளை மோத உள்ளன.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.