என்னை உங்களால் வீழ்த்த முடியாது – மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆவேசம்

பிரதமர் மோடியின் புகைப்படத்தைக் காட்டி 2019 ம் ஆண்டில் உத்தவ் தாக்கரே ஆட்சிக்கு வந்தார் என்று மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை உடைத்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையில்…

பிரதமர் மோடியின் புகைப்படத்தைக் காட்டி 2019 ம் ஆண்டில் உத்தவ் தாக்கரே ஆட்சிக்கு வந்தார் என்று மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை உடைத்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் புதிய அணி உருவானது. அந்த அணியின் துணையுடன், பாஜக அந்த மாநிலத்தில் கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது.  புதிய ஆட்சியில் துணை முதல்வர் இருக்கும் தேவேந்திர ஃபட்னாவிஸ் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், காங்கிரஸ் மற்றும் என்சிபியுடன் சேர்ந்து என்னை வீழ்த்த முயற்சி செய்தீர்கள், ஆனால், என்னை உங்களால் வீழ்த்த முடியாது என்று முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை காட்டமாக விமர்சித்தார்.

2019 ம் ஆண்டு தேர்தலில் பிரதமர் மோடியின் புகைப்படத்தைக் காட்டி ஆட்சி வந்த நீங்கள், பாஜகவின் முதுகில் குத்திவிட்டு காங்கிரஸ் மற்றும் என் சி பி யுடன் சென்றீர்கள்” எனவும் தேவேந்திர ஃபட்னாவிஸ் விமர்சனம் செய்தார். தேர்தலைச் சந்திக்காமல் பாஜக ஆட்சியைப் பிடித்தது பற்றிய  உத்தவ் தாக்கரேவின் பேச்சை  கடுமையாக விமர்சித்த ஃபட்னாவிஸ்,  நீங்கள் ஏன் தேர்தலைச் சந்திக்காமல், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் உதவியுடன் முதலமைச்சரானீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.