முக்கியச் செய்திகள் தமிழகம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்

மருத்துவப் படிப்பான எம்பிபிஎஸ், பல் மருத்துவ படிப்பான பிடிஎஸ் ஆகிய படிப்புகளில் சேருவதற்கான இணையதள விண்ணப்பம் நாளை வெளியிடப்படவுள்ளது.
பதிவு தொடங்கும் நாள் 22ம் தேதி ஆகும்.

இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று அறிவிப்பு வெளியிட்டார்.

2022-2023ஆம் ஆண்டின் மருத்துவம், பல் மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கான அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக மருத்துவ இடங்களில் சேருவதற்கான இணையதள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இணையதள விண்ணப்பப் பதிவிற்கான கடைசி நாள் அக்டோபர் 3 ஆகும். இணையதள முகவரி,  http://www.tnhealth.tn.gov.in,  http://www.tnmedicalselection.org என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் MBBS, BDS, சித்தா, யுனானி,
ஆயுர்வேதம், ஹோமியோபதி உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர NEET – UG தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம்.

நடப்பு 2022-2023 ஆம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை 17-ம் தேதி நடைபெற்றது. அகில இந்திய அளவில் 17,64,571 பேர் தேர்வை எழுதியதில் 9,93,069 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

புதுச்சேரியிலும், 9, 10,11ஆம் வகுப்பு தேர்வு ரத்து? -தமிழிசை பதில்

Niruban Chakkaaravarthi

கோடநாடு வழக்கு அடுத்த மாதத்துக்கு ஒத்தி வைப்பு

G SaravanaKumar

சென்னை ஆலந்தூரில் விபத்து-உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி

Web Editor