இன்னைக்கு நடித்துக்கொண்டிருக்கும் பொழுது உங்களது நியாபகம் வந்தது., we miss u sir என்று இயக்குனர் சேரன் சிவாஜி கணேசனின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
நூற்றாண்டு காணும் தமிழ் சினிமாவின் வரலாற்றை நடிகர் சிவாஜி கணேசனை தவிர்த்து விட்டு வேறு எவருக்கும் எழுத முடியாது. அந்த அளவிற்கு தனது நடிப்பாலும் கதா பாத்திரங்களாலும், வசனங்களாலும் எல்லோரையும் இன்றுவரை கட்டிப்போட்டு வைத்திருக்கும் அற்புத திரைக்கலைஞர். அப்படிப்பட்ட இந்த மாமேதையின் புகைப்படத்தை இயக்குனர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து நாங்க நடிகர்னு சொல்லிக்கிறதுக்காக எங்களை மன்னிச்சுடுங்க என்று கூறியுள்ளார்.
பெரும்பாலும் கிராமத்து மக்களுக்கு நெருக்கமான கதைக்களத்தை மையமாகக்கொண்டு கதைகளை உருவாக்குவதில் திறமைவாய்ந்த ஒருவர் என்றால் அது இயக்குனர் சேரன் அவர்கள்தான். இவர் தமிழ்சினிமாவில் என்றுமே மறக்க முடியாத, பாரதிகண்ணம்மா, பொற்காலம், வெற்றிகொடிக்கட்டு, ஆட்டோகிராப் என்று வரிசையாக பல வெற்றிப்படங்களை இயக்கி பல உயரிய விருதுகளை அள்ளியவர். இயக்குனராக மட்டுமின்றி தயாரிப்பாளர், நடிகர், எழுத்தாளராகவும் அறியப்பட்ட இயக்குனர் சேரன் இயக்கிய சிறந்த படங்களை இன்றும் எத்தனை தடவை வேண்டுமானாலும் பார்க்கலாம்.
அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் பல பரிமாணங்களை உள்ளடக்கிய ஒரு கலைஞராக, வலம் வரும் சேரன் அவரகள் இன்று தமிழ் சினிமாவின் நெற்களஞ்சியமாக, இன்றும் எல்லோர் மனதிலும் மறையாமல் வாழும் அற்புத கலைஞரான சூரக்கோட்டை சிவாஜி கணேசன் அவர்கள் பற்றிய நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
அதில், இன்னிக்கு ஷூட்டிங்ல நடிச்சிட்டு இருந்தேன்… சிலர் நடிக்கிறத பாத்துட்டு இருந்தேன்… அப்போ உங்க ஞாபகம் வந்துச்சு .. We miss you sir.. இப்படி சிரிச்சு பாத்து 100 போட்டோ எடுத்து டெலிட் பண்ணிட்டேன்.. ஹாஹா.. மன்னிச்சுக்குங்க எங்கள நாங்க நடிகர்கள்னு சொல்லிக்கிறதுக்கு.. என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இன்னிக்கு ஷூட்டிங்ல நடிச்சிட்டு இருந்தேன்… சிலர் நடிக்கிறத பாத்துட்டு இருந்தேன்… அப்போ உங்க ஞாபகம் வந்துச்சு ..
We miss you sir..
இப்படி சிரிச்சு பாத்து 100 போட்டோ எடுத்து டெலிட் பண்ணிட்டேன்.. ஹாஹா.. மன்னிச்சுக்குங்க எங்கள நாங்க நடிகர்கள்னு சொல்லிக்கிறதுக்கு.. pic.twitter.com/rifuJMnFDK— Cheran (@directorcheran) January 23, 2023









