முக்கியச் செய்திகள் இந்தியா

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: மத்திய அரசு!

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு தொடரந்து அதிகரித்து வருகிது. கடந்த ஆறு மாதத்திற்கு பின்னர் தற்போது ஒரு நாள் கொரோனா உயிரிழப்பு மீண்டும் ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில் மே 4ம் தேதி முதல் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க இருந்ததைத் தொடரந்து, நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சிபிஎஸ்இ பொதுத்தேர்வுவை ரத்து செய்யவேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

இதனையடுத்து, இன்று பிரதமர் மோடி மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உட்டபட பலருடன் கலந்தாலோசனை மேற்கொண்டார். இந்நிலையில் தற்போது பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பல மாநிலங்களில் தற்போது கொரோனாவின் வீரியம் அதிகரித்து வரும் நிலையில், மே 4ம் தேதி தொடங்க இருந்த சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒத்திவைக்கப்பட்ட தேர்வு மீண்டும் நடத்தப்படும் நிலையில் 15 நாட்கள் முன்பாக மாணவர்களுக்கு அறிக்கை அனுப்பப்படும். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் இதுவரை நடைபெற்ற தேர்வுகளின் அடிப்படையில் வழங்கப்படும் எனவும் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் திருப்தியளிக்கவிலை என்றால் அவர்களுக்கு பின்னர் தனியாக தேர்வு நடத்தப்படும் என ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

Advertisement:

Related posts

குழந்தைகளுக்கு வாழ்த்து சொல்ல வரும் விர்ச்சுவல் கிறிஸ்துமஸ் தாத்தா!

Jayapriya

“புதுச்சேரியில் பாஜக தலைமையில் ஆட்சி அமையும்” – அமித் ஷா உறுதி

Saravana Kumar

திருநங்கைகளுக்கு வேலை உருவாக்கித் தருவேன்: அதிமுக வேட்பாளர் கஜேந்திரன்

Karthick