மகாராஷ்ராவில் இன்றிரவு முதல் கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில், சொந்த ஊர் செல்வதற்காக ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள், மும்பை ரயில் நிலையம் முன்பு குவிந்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இன்றிரவு 8 மணி முதல் முதல் மே ஒன்றாம் தேதி வரை கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. பள்ளி, கல்லூரிகள், சினிமா தியேட்டர்கள், பூங்காக்கள், வணிக வளாகங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் கடைகள் மூடியிருக்கும் என்றும், அத்தியாவசிய சேவைகளுக்கும் மட்டும் அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால், மும்பையில் தங்கி வேலை பார்க்கும் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊரை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதில் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு ரயிலில் செல்வதற்காக, மும்பை லோக்மான்ய திலக் ரயில் நிலையம் முன்பு குவிந்துள்ளனர். அவர்கள், கொளுத்தும் வெயிலில் கூட்டம் கூட்டமாக மனைவி, குழந்தைகளுடன் காத்துக்கிடப்பதை காண முடிகிறது.