நேற்று 9,000… இன்று 7,000… – இந்தியாவில் குறையும் கொரோனா பாதிப்பு!

நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 9 ஆயிரமாக இருந்த நிலையில், இன்று 7 ஆயிரமாக குறைந்துள்ளது. இந்தியாவில் சமீப காலமாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மத்திய அரசும், மாநில அரசுகளும்…

நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 9 ஆயிரமாக இருந்த நிலையில், இன்று 7 ஆயிரமாக குறைந்துள்ளது.

இந்தியாவில் சமீப காலமாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் கடந்த சில நாட்களாக, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,000 வரை உயர்ந்தது. இந்நிலையில் இன்று, இந்த எண்ணிக்கை 7,000 ஆக குறைந்துள்ளது.

இதுகுறித்து, மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 61,233 ஆக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,633 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் கொரோனா தொற்றால் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : ’குடிச்சுட்டு வண்டி ஓட்டுனா தான் ஃபைன் போடனும், தள்ளிட்டு வந்தா ஃபைன் போடக்கூடாது’ – போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளம்பெண்!

அதே வேளையில், கடந்த 24 மணி நேரத்தில் 6,702 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 29 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.