வேளாண்மை – உழவர் நலத்துறை மற்றும் வீட்டு வசதி துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய தோட்டக்கலைக் கல்லூரி, வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களை காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், மஞ்சள் ஆராய்ச்சி மையம் மற்றும் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.
அண்மைச் செய்தி: சினிமாவிற்காக வாழ்க்கையை தொலைத்தவரின் கதை
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் 5 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மறைமலை அடிகளார் சமுதாயக் கூடம் மற்றும் சென்னை, கோயம்பேட்டில் 2 கோடியே 67 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஓய்வுக் கூடம் மற்றும் சிற்றுண்டியகத்தையும் அவர் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் நடைபெறும் கைத்தறி & துணி நூல், கதர் கிராமத்தொழில்கள் & கைவினைப்பொருட்கள், வணிக வரிகள், முத்திரைத்தாள்கள் & பத்திரப்பதிவுத்துறைகளின் மானிய கோரிக்கையில் பங்கேற்றுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








