ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள எலான் மஸ்க் தற்போது கோகோ கோலா நிறுவனத்தை வாங்கவுள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தை டெஸ்லா அதிபரும், உலகின் பெரும் பணக்காரருமான எலான் மஸ்க் வாங்கத் தயாராக இருப்பதாகவும், இதற்காக ட்விட்டர் நிறுவன பங்குதாரர்களைச் சந்தித்து அவர் பேசி வருவதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியாகின. இந்நிலையில் ட்விட்டரை 44 பில்லியன் டாலர் அதாவது சுமார் ரூ.3 லட்சம் கோடிக்கு வாங்கியுள்ளார் டெஸ்லா அதிபர் எலான் மஸ்க்.
இதற்கிடையில் எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து பல்வேறு பதிவுகளைப் பதிவு செய்து வருகிறார். இது தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், ட்விட்டரைத் தொடர்ந்து கோகோ கோலா நிறுவனத்தை வாங்கவுள்ளதாக டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கோகோ கோலா நிறுவனத்தை வாங்கி கோகோயினுடன் இணைக்கப் போவதாக எலான் மஸ்க் இன்று காலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
https://twitter.com/elonmusk/status/1519480761749016577
மேலும், மற்றொரு பதிவில் பொதுமக்களின் நம்பிக்கைக்குத் தகுதியாக இருக்க ட்விட்டர், அரசியல் ரீதியாக நடுநிலையுடன் இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
மற்றொரு பதிவில், நான் இப்போது மெக்டொனால்ட்ஸை வாங்கி, அங்குள்ள ஐஸ்கிரீம் இயந்திரங்களை சரிசெய்யப் போகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, மற்றொரு ட்விட்டில், ட்விட்டரை அதிகபட்ச மகிழ்ச்சி தரும் இடமாக மாற்றுவோம் என பதிவிட்டுள்ளார்.
அடுத்தடுத்து ட்விட் செய்த எலான் மஸ்க் மெக்டொனால்ட்ஸை வாங்குவது தொடர்பாக பதிவிட்டிருந்த ட்வீட்டை நீக்கிவிட்டு அதன் ஸ்கிரீன் ஷார்ட்டை மீண்டும் பதிவிட்டு, அதில் கேளுங்கள் என்னால் அதிசயங்களை நிகழ்த்த முடியாது என பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/elonmusk/status/1519495982723084290
உலகின் மிகப்பெரிய பணக்கரார்களில் ஒருவரான எலான் மஸ்க்கின் அடுத்தடுத்த ட்விட்டர் பதிவு அனைத்து தரப்பினரது மத்தியிலும் தற்போது பேசுபொருளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.








