தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் யாசகம் பெற்று சேர்த்த 10 ஆயிரம் ரூபாய் பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்காக அனுப்பி வைத்த யாசகரின் செயல் நெகிழ வைத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஆலங்கிணரை சேர்ந்தவர் பாண்டியன். இவர் பல்வேறு இடங்களில் யாசகம் பெற்று வருகிறார். இந்நிலையில், தான் சேமித்து வந்த பணத்தில் 10 ஆயிரம் ரூபாய் பணத்தை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் சென்று வழங்கினார். இலங்கை தமிழர்களுக்கு உதவும் நோக்கில் இந்த பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு கொடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய பாண்டியன், தனக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மும்பையில் தேபுக் நடத்தி அங்குள்ள சுப்பிரமணியம் சுவாமி கோயிலில் பயனடைந்து வருடம் வேலை செய்து குழந்தைகளை திருமணம் செய்து கொடுத்தேன். மனைவி இறந்த நிலையில், தமிழ்நாடு வந்தபோது குடும்பத்தினர் ஒதுக்கி வைத்ததை தொடர்ந்து திருச்சி, வேலூர், திருவண்ணாமலை, ராமேஸ்வரம் உட்பட பல மாவட்டங்களுக்கு சென்று யாசகம் பெற்று வந்தேன் என்றார்.
மேலும் தான் யாசகம் பெற்ற பணத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி வருகிறேன். தான் அரசு பள்ளிகளுக்கும் உதவியுள்ளேன் என கூறினார். தற்போது இலங்கை தமிழர் நிவாரண நிதிக்கு பணம் வழங்கி உள்ளேன். மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 15 நாட்கள் தங்கி வீடு கடைகளில் பெற்ற பணம் 10 ஆயிரம் ரூபாயை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் சென்று வழங்கினேன் என்றார்.
மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவிடம் பணத்தை வழங்க சென்ற போது பணம் பெற்றுக் கொள்வதில்லை எனக்கூறியதோடு, முதலமைச்சர் நிவாரண நிதி வங்கி கணக்கு வழங்க ஆட்சியர் அனுப்பி வைத்தார். பின்னர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் வங்கிக்கு சென்று, பாண்டியன் 10 ஆயிரம் ரூபாய் பணத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு செலுத்தினார்.








