“யாரும் நாம்பாதீங்க” – #RaajKamalFilms நிறுவனம் வெளியிட்ட பதிவால் அதிர்ச்சி!

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி சிலர் மோசடியில் ஈடுபடுவதாக அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தற்போது சிவகார்த்திகேயனின் அமரன், எஸ்டிஆர் 48, தக் லைஃப் ஆகிய திரைப்படங்களை தயாரித்து…

"Yarum Naampadinga" - #RaajKamalFilms shocked by the post released by the company!

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி சிலர் மோசடியில் ஈடுபடுவதாக அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தற்போது சிவகார்த்திகேயனின் அமரன், எஸ்டிஆர் 48, தக் லைஃப் ஆகிய திரைப்படங்களை தயாரித்து வருகிறது. அதுமட்டுமின்றி ஸ்டன்ட் இயக்குனர்கள் அன்பறிவ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படமும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. அதில், “ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களுக்காக எந்த ஒரு காஸ்டிங் ஏஜென்டுகளையும் நாங்கள் நியமிக்கவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.

நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக வரும் செய்திகள் எவ்வகையில் உங்களை வந்தடைந்தாலும் அதை நம்பவேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறோம். எங்களது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரை அனுமதியின்றி பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியான கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதன் மூலம் எச்சரிக்கிறோம்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.