நூல் விலை கிலோவுக்கு ரூ.40 உயர்வு; தொழில்துறையினர் அதிர்ச்சி

நடப்பு மாதத்திற்கான நூல் விலை கிலோவுக்கு மேலும் 40 ரூபாய் உயர்ந்துள்ளதால் தொழில்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருப்பூரில் 1000-க்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. பின்னலாடை உற்பத்தியில மூலப்பொருளாக விளங்கும் நூலின் விலையில்…

நடப்பு மாதத்திற்கான நூல் விலை கிலோவுக்கு மேலும் 40 ரூபாய் உயர்ந்துள்ளதால் தொழில்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பூரில் 1000-க்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. பின்னலாடை உற்பத்தியில மூலப்பொருளாக விளங்கும் நூலின் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்வதில் வியாபாரிகள் குழப்பமடைந்துள்ளனர். தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்றபடி நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரிப்பார்கள். நூல் விலை உள்பட மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுவது வழக்கம். கடந்த சில மாதங்களாகவே நூலின் விலை அதிகரித்து வரும் நிலையில், நடப்பு மாதத்திற்கான நூல் விலையும் கிலோவுக்கு 40 ரூபாய் உயர்ந்துள்ளது.

அண்மைச் செய்தி: ‘‘ஆட்சி என்பது சொகுசு வாழ்க்கைக்கான பதவி இல்லை’ – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்’

இதனால், திருப்பூர் சுற்றுவட்டார தொழிற்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். நூல் விலையை குறைக்க வலியுறுத்தி போராட்டமும் திருப்பூரில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. ஆனாலும், கடந்த மாதம் நூல் விலை கிலோவுக்கு ரூ.30 உயர்ந்திருந்தது. இந்நிலையில் நடப்பு மாதத்திற்கான நூல் விலையை நூற்பாலைகள் வெளியிட்டன. இதனால், திருப்பூர் தொழில் துறை அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதன்படி, ஒரு கிலோ 20-வது நம்பர் கோம்டு நூல் ரூ.403-க்கும், 24-ம் நம்பர் ரூ.415-க்கும், 30-ம் நம்பர் ரூ.425-க்கும், 34-ம் நம்பர் ரூ.445-க்கும், 40-ம் நம்பர் ரூ.465-க்கும், 20-ம் நம்பர் செமி கோம்டு நூல் கிலோ ரூ.395-க்கும், 24-ம் நம்பர் 405-க்கும், 30-ம் நம்பர் ரூ.415-க்கும், 34-ம் நம்பர் 435-க்கும், 40-ம் நம்பர் ரூ.455-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.