மயூரநாதர் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு யாகசாலை பிரவேச நிகழ்ச்சி!

மயூரநாதர் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு காவிரி புனித நீர் யானை மீது மல்லாரி வாத்தியங்களுடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு யாகசாலை பிரவேச நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் திருவாவடுதுறை ஆதீன மடாதிபதி பங்கேற்றனர். மயிலாடுதுறை மாவட்டம்,…

மயூரநாதர் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு காவிரி புனித நீர் யானை மீது மல்லாரி வாத்தியங்களுடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு யாகசாலை பிரவேச நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் திருவாவடுதுறை ஆதீன மடாதிபதி பங்கேற்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம், இங்கு திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான 2000 ஆண்டுகள் பழைமையான மயூரநாதர் கோயில் அமைந்துள்ளது.  இந்த கோயிலில் குடமுழுக்கு 18 ஆண்டுகளுக்கு பிறகு செப்டம்பர்  3-ம் தேதி நடைபெற உள்ளது.  இதனால் ஆலயம் புதுப்பிக்கப்பட்டும், 123 யாக குண்டங்களுடன் பிரம்மாண்டமான யாகசாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு காவிரி புனித நீர் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்த புனித நீர் வேதமந்திரம் முழங்க யானை மீது ஊர்வலமாக ஆலயத்திற்கு எடுத்துவரப்பட்டு ஒன்பது தவில், ஒன்பது நாதஸ்வரங்கள் கொண்ட மல்லாரி இசை கச்சேரி முழங்க ஆலயத்திற்கு புறப்பட்டது.
இதனை திருவாவடுதுறை ஆதீனம் 24-வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியர் சுவாமிகள் துவக்கிவைத்தனர்.  இதனை தொடர்ந்து யாகசாலை பிரவேச நிகழ்ச்சியும், கலச அபிஷேகமும் நடைபெற்றது.  இன்று மாலை முதல் 3-ம் தேதி வரை என 82 மணி நேரம் 108 ஓதுவார்களை கொண்டு அகண்ட பாராயணம் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக ஆதீன குருமகா சன்னிதானம் தெரிவித்தார்.
அனகா காளமேகன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.