உலகின் வேகமான எழுத்தாளர் யார்? நைஜீரிய நகைச்சுவை நடிகரின் வீடியோ வைரல்!

நைஜீரிய நகைச்சுவை நடிகர் ஜோஷ் ஆல்ஃபிரட் ‘உலகின் வேகமான எழுத்தாளர்’ என்ற கூறி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நகைச்சுவை நடிகர் ஜோஷ் ஆல்ஃபிரட் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் வீடியோ ஒன்றை…

நைஜீரிய நகைச்சுவை நடிகர் ஜோஷ் ஆல்ஃபிரட் ‘உலகின் வேகமான எழுத்தாளர்’ என்ற கூறி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நகைச்சுவை நடிகர் ஜோஷ் ஆல்ஃபிரட் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் ரியாலிட்டி ஷோ ஆடிஷனில் ஒரு பங்கேற்பாளராக ஜோஷ் ஆல்ஃபிரட் பங்கேற்கிறார். அவருடைய இரண்டு நண்பர்கள் நடுவர்களாகவும் மற்றொருவர் பங்கேற்பாளராகவும் செயல்படுகிறார்.

மேடையில் ஏறியவுடன், மூன்று விநாடிகளில் ஒரு பக்கத்தை எழுத முடியும் என்று பெருமையாகக் கூறி, உலகின் அதிவேக எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்கிறார். மேலும் உலகிலேயே வேகமாகப் பேசுபவர் என்று தனது நண்பரை மேடைக்கு அழைக்கிறார்.

நடுவர்களில் ஒருவர் ஆல்ஃபிரட் திறமையை நிரூபிக்க சவால் விடுகிறார், உடனே நண்பர் வேகமாக புரியாத மொழியில் பேசுகிறார். அதை கேட்டு எழுதுவது போல் அந்த நகைச்சுவை நடிகர் நடிக்கிறார். முடிவில் அந்த பேப்பரை நடுவரிடம் அவர் காட்டுகிறார். என்ன இது? என கேட்டு நடுவர் கடும் கோபம் அடைவதுடன் அந்த வீடியோ நிறைவு பெறுகிறது.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.