முக்கியச் செய்திகள் இந்தியா

சீரம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரிக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு!

சீரம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆதர் பூனவாலாவிற்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இவருக்கு சிஆர்பிஎப் காவல்துறையினர் பாதுகாப்பு வழங்குவார்கள் என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியைத் தயாரித்து வழங்கும் சீரம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரிதான் ஆதர் பூனவாலா. இவருக்கு அடையாளம் தெரியாத குழுக்களிடமிருந்து கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடர்பாக மிரட்டல்கள் வருவதாகவும் அதனால் அவருக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்நிறுவனத்தின் தொடர்பு அதிகாரி பிரகாஷ் குமார் சிங் மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்குக் கடிதம் எழுதினார். இந்த கடிதமானது கடந்த ஏப்ரல் 16ம் தேதி மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு அனுப்பப்பட்டது.

’ஆற்றல் வாய்ந்த பிரதமரின் ஆட்சியில், கொரோனாவிற்கு எதிரான போரில் இந்தியா அரசோடு தோளோடு தோள் நிற்கிறோம்’ என்றும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அவருக்கு மத்திய அரசு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்ளது.

இதுவரை இந்தியாவில் உள்ள மாவட்டங்களிருந்து சீரம் நிறுவனத்திற்கு 34 கோடி தடுப்பூசி டோஸ்களை வழங்குவதற்கான ஆடர்களும், தனியார் மருத்துவமனையிலிருந்து 2 கோடி டோஸ்கள் வழங்குவதற்கான ஆடர்களும் சீரம் நிறுவனத்திற்குக் கிடைத்துள்ளது.

Advertisement:

Related posts

கொரோனா பாதிப்பு : புதுவை பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடல்!

Karthick

இளைஞரை ஓட ஓட விரட்டி கொலை செய்த மர்ம நபர்கள்

Karthick

தேவைக்கேற்ப ஆக்சிஜன் பயன்படுத்தவேண்டும்:அமைச்சர்!

L.Renuga Devi