முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா

இந்தியாவிற்கு உதவி கரம் நீட்டிய சர்வதேச நாடுகள்!

கொரோனா 2வது அலையால் இந்தியா பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகள் மருத்துவ உதவிகளை வழங்கி வருகின்றன.

கொரோனா 2வது அலையால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு, ஆக்ஸிஜன் தேவை, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிரித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு, இந்தியாவுக்கு 120 ஆக்சிஜன் செறிவூட்டிகளை, பிரிட்டன் அனுப்பி உள்ளது. இவை, இன்று காலை டெல்லி வந்தடைந்தன. இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி இதனை தெரிவித்தார். முன்னதாக, கடந்த செவ்வாய் கிழமை, 495 ஆக்சிஜன் செறிவூட்டிகளையும், 140 வென்டிலேட்டர்களையும், பிரிட்டன் இந்தியாவுக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, 20 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 75 வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுடன், ரஷ்ய விமானம் டெல்லி வந்தடைந்தது. ரஷ்யாவின் மதிப்பு மிக்க கூட்டாளியான இந்தியா, தற்போது கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதால், அதற்கு உதவ வேண்டும் என்பதில், தங்கள் நாடு மிகுந்த அக்கறை கொண்டிருப்பதாக, இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் நிகோலே குடஷேவ் தெரிவித்துள்ளார். ஆக்சிஜன் செறிவூட்டிகள், வென்டிலேட்டர்கள், மருந்துப் பொருட்கள் உள்ளிட்டவை, 2 சிறப்பு விமானங்கள் மூலம், இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், 740 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள், மருந்து மூலப் பொருட்கள் உள்ளிட்டவற்றை அமெரிக்கா, இந்தியாவுக்கு அனுப்புகிறது. 440 ஆக்சிஜன் சிலிண்டர்கள், கொரோனா தொற்று கண்டறிவதற்கான 9 லட்சத்து 60 ஆயிரம் உபகரணங்கள், தடுப்பூசிக்கான மூலப் பொருட்கள், ஒரு லட்சம் N95 முக கவசங்கள் உள்ளிட்டவற்றை அமெரிக்கா, இந்தியாவுக்கு அனுப்புகிறது. அமெரிக்க ராணுவ விமானம் மூலம், இந்த உதவிப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இவை விரைவில் இந்தியா வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தொற்றால் அமெரிக்கா கடுமையாக பாதிக்கப்பட்ட போது, இந்தியா தங்களுக்கு உதவியதாக தெரிவித்துள்ள அமெரிக்க அரசு, தற்போது, கொரோனா 2வது அலையால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு, அமெரிக்கா உதவுவதாகத் தெரிவித்துள்ளது.

Advertisement:

Related posts

6 லட்சம் தடுப்பூசி கொள்முதல் செய்ய உத்தரவு : தமிழிசை

Karthick

பல்லாவரம் காவல் உதவி ஆணையர் கொரோனாவுக்கு உயிரிழப்பு!

Karthick

“பா.ஜ.கவை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள்” – வைகோ கண்டனம்!

Karthick