முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

சீன அதிபராக தொடர்ந்து 3-வது முறையாக ஷி ஜின்பிங் தேர்வு!

சீன நாட்டின் அதிபராக ஷி ஜின்பிங் (வயது 69) தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டு இதுவரை இல்லாத வகையில் கடந்த அக்டோபர் மாதம் மூன்றாவது முறையாக ஷி ஜின்பிங் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனைத் தொடர்ந்து, சீன நாடாளுமன்றத்தில் நடைபெற்ற 14-வது தேசிய மக்கள் மாநாட்டில் சுமார் 3,000 உறுப்பினர்கள் மீண்டும் சீன அதிபராக ஷி ஜின்பிங்கை தேர்வு செய்ய ஆதரவளித்துள்ளனர். ஷி ஜின்பிங்கிற்கு எதிராக யாரும் போட்டியிடாத நிலையில் அவர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

மேலும், சீன ராணுவ ஆணையத்தின் தலைவராகவும் ஷி ஜின்பிங் மீண்டும் பொறுப்பேற்கவுள்ளார். மீண்டும் 5 ஆண்டுகள் சீனாவை ஷி ஜின்பிங் ஆட்சி செய்யவுள்ள நிலையில், சீனாவை அதிக முறை ஆட்சி செய்த பெருமையையும் பெறுகிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

33% விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டால் மட்டுமே இழப்பீடு: அமைச்சர்

EZHILARASAN D

ஊரடங்கில் அதிகம் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் முதியோர்

துரித கதியில் பாதாள சாக்கடை பணிகள் – திருச்சி மக்கள் வரவேற்பு

Jayakarthi