டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் மல்யுத்த போட்டி 57 கி எடை பிரிவில் இந்தியா காலிறுதிக்கு முன்னேறியதைத் தொடர்ந்து தற்போது அரையிறுதிக்கு இந்தியா முன்னேறியுள்ளது.
ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்த போட்டி 57 கி எடை பிரிவில் இந்தியாவின் ரவிக்குமார் கொலம்பிய வீரரை 13-2 கணக்கில் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். 8 நாட்டின் வீரர்கள் பங்கேற்ற காலிறுதிக்கான தகுதி சுற்று போட்டியில் கொலம்பியாவின் அர்பனோவை ரவிக்குமார் எதிர்கொண்டார். அதே போல செர்பியாவின் மிகிக்கை எதிர்கொண்ட ஜப்பானின் டகஹஹி காலிறுதிக்கு முன்றேயுள்ளார்.
இதனைத் தொடர்ந்து காலிறுதி போட்டியில், பல்கேரியாவின் வான்கலோவை எதிர்கொண்ட ரவிக்குமார் 14-4 என்கிற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதே போல ஆடவருக்கான மல்யுத்தம் 86 கி எடைப்பிரிவில் இந்திய வீரர் தீபக் புனியா, நைஜிரியாவின் அகியோமோரை 12-1 எனும் செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதனையடுத்து சீனாவின் லின் ஜுஷெனை எதிர்கொண்ட தீபக், 6-3 செட்கணக்கில் சீன வீரரை வீழ்த்தி அரையிறுதிக்கு தீபக் முன்னேறியுள்ளார்.








