இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா

இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24…

இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 42 ஆயிரத்து 625 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,17,69,132 ஆக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 562 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், பலியானோரின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 25 ஆயிரத்து 757 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 36 ஆயிரத்து 668 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 48 கோடியே 52 லட்சத்து 86 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.