அந்தரத்தில் தொங்கும் நீச்சல் குளம் – எங்கே இருக்கிறது தெரியுமா?

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் அமைக்கப்பட்டுள்ள அந்தரத்தில் தொங்கும் நீச்சல் குளம் ஏராளமானோரை ஈர்த்து வருகிறது. இந்த நீச்சல் குளத்தின் பெயர் ’ஸ்கை பூல்’ (Sky Pool). அந்தரத்தில் மிதக்கும் இந்த நீச்சல் குளம் 82…

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் அமைக்கப்பட்டுள்ள அந்தரத்தில் தொங்கும் நீச்சல் குளம் ஏராளமானோரை ஈர்த்து வருகிறது. இந்த நீச்சல் குளத்தின் பெயர் ’ஸ்கை பூல்’ (Sky Pool).


அந்தரத்தில் மிதக்கும் இந்த நீச்சல் குளம் 82 அடி நீளமும் 115 அடி உயரமும் கொண்டுள்ளது. இதில் 50 டன் அளவுக்கு தண்ணீரை நிரப்பலாம். இரு கட்டடங்களுக்கு நடுவில் உள்ள 10வது மாடியில் அந்தரத்தில் தொங்கும் விதமாக பொறியாளர் எக்கெர்ஸ்லி ஒ கலகான் (Eckersley O’Callaghan) என்பவரால் நீச்சல் குளம் கட்டப்பட்டுள்ளது. உலகத்திலேயே அந்திரத்தில் தொங்கும் முதல் நீச்சல் குளம் இதுதான். கடந்த 19 ஆம் தேதி இந்த நீச்சல் குளம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கண்ணாடி போன்ற அமைப்பினால் இந்த நீச்சல் குளம் உருவாக்கப்பட்டுள்ளதால், குளித்தபடியே வானத்தையும், பூமியையும் பார்த்து ரசிக்கலாம். இதனால் ஏராளமானோர் இந்த நீச்சல் குளத்தில் நீந்தி மகிழ துடிக்கின்றனர். மிதக்கும் நீச்சல் குளத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.