முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள் சினிமா

கமல்ஹாசனுக்கு IIFA விருது அறிவிப்பு – உற்சாகத்தில் ரசிகர்கள்!!

திரைத்துறையில் சிறந்து விளங்கும் கமல்ஹாசனை கௌரவிக்கும் வகையில் இந்திய சினிமாவின் ஆகசிறந்த பங்களிப்பு என்ற பிரிவில் IIFA விருது வழங்கப்படவுள்ளது.

கருப்பு வெள்ளை காலம் தொடங்கி இன்று வரை தனது தனித்துவமான நடிப்பின் மூலமும், தன் படங்கள் மூலமும் ரசிகர்களை உற்சாகப்படுத்தி, இந்திய சினிமாவிற்கே பெருமைமிகு மனிதராக வலம் வந்து கொண்டிருப்பவர் கமல்ஹாசன்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வசூல்ரீதியாக இமாலய சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து தற்போது கமல்ஹாசன், ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைபடத்தில் நடித்து வருகிறார்.

மும்முரமாக நடைபெற்று வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தில் எட்டியுள்ளது. படத்தின் வேலைகள் முடிந்து அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளியாகம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், கமல்ஹாசன் இயக்குநர் மணிரத்னம் மற்றும் இயக்குநர் எச் வினோத் ஆகியோருடன் கைகோர்த்து புதிய படங்களில் நடிக்கவிருக்கிறார்.

இதுதவிர கமல்ஹாசன் சிவகார்த்திகேயன், சிம்பு ஆகியோரை வைத்து தனது சொந்த தயாரிப்பில் பல முக்கிய திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இப்படி திரைத்துறையில் பல் துறை வித்தகராக வலம் வரும் கமல்ஹாசனை கௌரவ படுத்தும் வகையில் சர்வதேச அளவில் உயரிய விருது வழங்கப்படவுள்ளது.

அபுதாபி யாஸ் தீவில் உள்ள எதிஹாட் அரங்கில், வருகிற மே 27 ஆம் தேதியன்று 23வது IIFA விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்திய திரைப்படங்களையும் இந்திய திரை கலைஞர்களையும் கவுரவிக்கும் இந்த விருது விழாவில், இந்திய சினிமாவில் ஆகச்சிறந்த பங்களிப்பிற்கான IIFA விருது கமல்ஹாசனுக்கு வழங்கப்படும் என IIFA ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் முடிவெடுத்து அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு கமலின் ரசிகர்களை உற்சாகப் படுத்தியுள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 29 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

G SaravanaKumar

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு இல்லை: வானிலை ஆய்வு மையம்

Halley Karthik

பிரதமர் முதல் ஜனாதிபதி வரை புகார் மனு அனுப்பியுள்ள ஊராட்சி மன்ற தலைவர்

Web Editor