ரோலக்ஸ் அவன் பேர் டில்லி… இந்த வசனம் நம் அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்த ஒன்றாகும்.. அப்பேற்பட்ட பெயருக்கு சொந்தக்காரரான நடிகர் கார்த்தி கடந்து வந்த பாதையை தற்பொழுது காணலாம்…
25 மே 1977 ஆம் ஆண்டு நடிகர் சிவகுமாருக்கும், லக்ஷ்மி சிவகுமாருக்கும் மகனாக பிறந்தவர் கார்த்தி. பொறியியல் மாணவரான இவர், கிராஃபிக் designing மேல் இருந்த ஈடுபட்டால், நியூயார்க்கில் பகுதி நேர கிராஃபிக் Deisgnerஆக பணிபுரிந்தார். சினிமா மீது இருந்த அலாதியான பிரியத்தால், சென்னைக்கு வந்த பொழுது இயக்குநர் மணிரத்தினத்தை சந்திக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. பின்னர் அவருடன் இணைந்து தான் அண்ணன் சூர்யா நடிப்பில் வெளியான ஆயுத எழுத்து திரைப்படத்தில் துணை இயக்குநராக பணியாற்றி, இயக்குநர் மணிரத்தினத்தின் பிரியத்துக்குரிய துணை இயக்குநரானார். அது மட்டுமின்றி அந்த திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்திலும்
நடித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அது சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் சினிமா பிரியர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து கார்த்திக்கு பல வாய்ப்புகள் வர அதனை நிராகரித்து இயக்கத்தின் மீது ஆர்வத்துடன் இருந்தார். இதனை அறிந்த தந்தை சிவகுமார். “நீ எப்பொழுது வேண்டுமானாலும் இயக்கலாம். ஆனால் இளமையாக இருக்கும்போது மட்டுமே நடிக்கமுடியம். நீ நடி” எனும் தந்தையின் வார்த்தை கார்த்தியின் வாழ்க்கையையே மாற்றியது. 2007 ஆம் ஆண்டு இயக்குநர் அமீர் இயக்கத்தில், பருத்தி வீரன் படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகமானார் கார்த்தி. 2005இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிதி நெருக்கடி மற்றும் தயாரிப்பு சிக்கல்கள் காரணமாக 2007இல் தான் வெளியானது. வெளியான நாளிலிருந்து இன்று வரை இந்த படத்தையும், அதில் கார்த்தியின் நடிப்பையும் கொண்டாடாத ரசிகர்களே இல்லை. இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை தட்டி சென்றார் நடிகர் கார்த்தி. வர்த்தக ரீதியாகவும் அந்த படம் நல்ல வசூலை குவித்தது.
அதே ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். அவருக்கு தெரிந்தோ தெரியாமலோ அது அவரின் சினிமா வாழ்வை நிலைநிறுத்தும் ஒரு படமாக அமைந்தது. அந்த படத்தில் அவரது நடிப்பு, நகைச்சுவை, நடனத்திற்கு மயங்கதோர் யாருமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். தொடர்ந்து நடைபெற்ற ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்பாலும், வெளியீட்டு தேதி தள்ளிபோனதாலும், பல பட வாய்ப்புகளை அவர் தவிர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இருப்பினும், யாரும் எதிர்பாராத அளவுக்கு அந்த படம் மக்கள் மத்தியில் சென்றடைந்தது. அப்பொழுது தான் சினிமா உலகிற்கு தெரியவந்தது, மக்களுக்கு இதுபோன்ற புராண படங்களும் பிடிக்கும் என்று.
பிறகு 2010ஆம் ஆண்டு, லிங்குசாமி இயத்தில் வெளியான பையா திரைப்படம், இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று தந்தது. ஒரே ஆண்டில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் மற்றும் பையா ஆகிய இரண்டு படங்களும் சிறந்த நடிகருக்கான பிரிவில் பிலிம்பேர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அந்த அளவுக்கு அவரின் நடிப்பாற்றல் இரு படங்களிலும் வித்தியாசமாக தென்பட்டது. அதுமட்டுமின்றி நடிகர் கார்த்தி மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் chemistry நன்றாகவே செயல்பட்டது.
2006 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான விக்ரமர்குடு ரீமேக் செய்யப்பட்டு 2011 ஆண்டு சிவா இயக்ககத்தில் வெளியான சிறுத்தை திரைப்படம், தனது ரசிகர்கள் மத்தியில் ஒரு கம்பீரமான மரியாதையை பெற்று தந்தது என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் திருடன் மற்றும் போலீஸ் என இரு வேடங்களில் நடித்த நடிகர் கார்த்தி திருடனாக துடிப்பான இளைஞனாகவும் மிகவும் நகைச்சுவையாகவும் நடித்திருப்பார். ஒரு போலீஸாக, நேர்மையான காவல் அதிகாரியாகவும், அன்பான கணவனாகவும், அக்கறையாக மற்றும் பொறுப்பான தந்தையாகவும் நடித்து பார்ப்போர் கண்களில் ஆனந்த கண்ணீர் வரவழைக்க செய்திருப்பார்.
பிறகு பல படங்கள் நடித்த கார்த்திக்கு கலவையான விமர்சனங்களே வந்த வண்ணம் இருந்தது. 2014-ல் பா.ரஞ்சித் இயத்தில் வெளியான மெட்ராஸ் திரைப்படத்தில் கார்த்தியின் எதார்த்தமான மாற்று இயற்கையான நடிப்பு, அந்த படத்தை வணிகரீதியாக வெற்றி பெற செய்தது. அதோடு நிற்காமல் நண்பனுக்காக எதையும் செய்யும் நண்பன், சண்டை நேரங்களில் விட்டு கொடுக்கும் காதலனாகவும், பகுதி மக்கள் மிது அக்கறை கொண்ட இளைஞனாகவும் உணர்வுகளை பொழிந்து வடசென்னை பகுதி மக்கள் மீது இருந்த எண்ணத்தையும் மாற்றியது, இயக்குநர் பா. ரஞ்சித்தை மக்கள் அறியவும் செய்தது.
பின்னர் கொம்பன், பிரியாணி, காற்று வெளியிடை படங்களில் நடித்து என கலவையான விமர்சனங்களை பெற்ற நடிகர் கார்த்தி 2017-ம் ஆண்டு ஹெச்.வினோத் இயக்கத்தில் வெளியான தீரன் அதிகாரம் 1 திரைப்படத்தில் கார்த்தியின் இயல்பான மற்றும் எதார்த்தமான அனைத்து தரப்பு சினிமா ரசிகர்களை ஓர் இடத்தில் கட்டி போட்டு படம்பார்க்க வைத்தது. அதுவரை ஒரு விளையாட்டான லவ்வர் பாயாக நடிகர் கார்த்தியை பார்த்தவர்கள் அது முதல் ஒரு சீரியசான நடிகராக பார்த்தனர்.
பின்னர் கடைக்குட்டி சிங்கம், தேவ் படங்களில் நடித்த கார்த்தியின் சினிமா வாழ்க்கையில் யாரும் எதிர்பாராத வேளையில், எதிர்பாராத கதைகளத்தோடு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியானது கைதி திரைப்படம். கார்த்தியின் சினிமா கேரியரில் அதிகம் வசூல் செய்த படம் என்னும் பெயரை பெற்றது. அதில் கார்த்தி பிரியாணி சாப்பிடும் அழகு, திரையரங்கில் மக்களை பசிக்க வைத்தது, Climax காட்சி பார்ப்போரை கண்கலங்க வைத்தது. அன்று முதல் இன்று வரை அந்த கைதி பிரியாணிக்கு உலகமெங்கும் கோடி கணக்கில் ரசிகர்கள் உள்ளனர் என்று சொன்னால் அது மிகையாகாது.
பின்னர். சுல்தான், விருமன் என்னும் மூர்க்கமான திரைப்படங்களில் காட்சி தந்த கார்த்தியின் வரிசையில் மேலும் கைதி 2, ஜப்பான், சர்தார் 2 எனும் படங்களும் வர காத்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பொன்னியின் செல்வனில் வானர் குல இளவரசனாக, ஒரு பொறுப்பான தளபதியாக, பார்ப்போர் மனதை கொள்ளையடிக்கும் வந்தியதேவனாக, “உயிர் உங்களுடையது தேவி” எனும் வசனத்தால் ரசிகர்களின் உயிரை கட்டிபோட்ட நடிகர் கார்த்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்….
– ஆண்ட்ரூ, நியூஸ் 7 தமிழ்