முக்கியச் செய்திகள் சினிமா

உலக நாயகனுக்கு உடல்நலக்குறைவு – மருத்துவமனையில் அனுமதி

பிரபல நடிகர் கமல்ஹாசன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

ஹைதராபாத் சென்று சென்னை திரும்பிய நடிகர் கமலஹாசனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக பரிசோதனை மேற்கொள்ளும்பொருட்டு சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்றார். அவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதன் அடிப்படையில், அவர் மருத்துவமனையில் அவுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காய்ச்சலுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சாதாரண காய்ச்சலா அல்லது வேற ஏதேனும் காய்ச்சலா என்ற அடிப்படையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் மருத்துவமனை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் நலமாக உள்ளதாகவும், லேசான காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், வழக்கமான பரிசோதனை முடிந்த பிறகு இன்று வீடு திரும்புவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மே 6-ம் தேதி முதல் இந்த ரயில்நிலையங்களில் ரயில்கள் நின்று செல்லும்

EZHILARASAN D

நீட் தேர்வில் விலக்கு பெறுவதுதான் அரசின் கொள்கை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

Web Editor

மனைவி கஷ்டபடாமல் இருக்க புதிய கருவி கண்டுபிடித்த கட்டிட தொழிலாளி!

G SaravanaKumar