முக்கியச் செய்திகள் உலகம் கட்டுரைகள் செய்திகள் விளையாட்டு

பிரேசிலின் “கால்பந்து அரக்கன்” ரொனால்டோ நசாரியோ


பரணிதரன்

கட்டுரையாளர்

உலகக் கோப்பை கால்பந்து போட்டி விறுவிறுப்பாக கத்தாரில் நடைபெற்று வரும் நிலையில்,  கால்பந்து உலகின் அரக்கனாக போற்றப்பட்ட பிரேசில் வீரர் ரொனால்டோ நசாரியோ பற்றிய சுவாரசியமான தகவல்களை படித்து அறிவோம் வாருங்கள்.

1998 உலகக்கோப்பை இறுதிப்போட்டி… பிரேசிலின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் அந்த 21 வயது வீரரின் தோளில் சுமத்தப்பட்டது. கால்பந்து உலகின் அதிசயம் என வர்ணிக்கப்பட்ட ரொனால்டோ நசாரியோ, தனது வாழ்வின் மிக முக்கியமான நாளை எதிர்நோக்கி இருந்தார்.    ஆட்டம் தொடங்குவதற்கு ஒரு மணி நேரமே இருந்தபோதுதான் அந்த சம்பவம் நேர்ந்தது. திடீர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட ரொனால்டோ, இறுதிப்போட்டியில் விளையாடும் அணியில் இருந்து கடைசி நேரத்தில் நீக்கப்பட்டார். இந்த செய்தியை அறிந்த ஒட்டுமொத்த உலகமும் திக்குமுக்காடி போனது…

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பயிற்சியாளர்கள், மருத்துவர்களின் அறிவுரைகளையும் மீறி, தனது உடல்நலத்தையும் பொருட்படுத்தாமல் இறுதிப்போட்டியில் களமிறங்கியே தீருவேன் என ஒற்றைக்காலில் நின்றார் ரொனால்டோ… கடைசி நிமிடத்தில் ரொனால்டோ போட்டியில் களமிறங்குவதும் உறுதியானது… ஆனால், உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த ரொனால்டோவால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை… இதனால், பிரேசில் அணி பிரான்ஸிடம் கோப்பையை நழுவவிட்டது… இருந்தும்.. தொடரின் சிறந்த வீரராக தேர்வானார் ரொனால்டோ…

புயலென வேகம்... யாரும் அறிந்திராத நுட்பங்கள், சிறந்த வீரர்களையும் திணறடிக்கும் அசாத்திய திறமைகள் கொண்டிருந்த ரொனால்டோ… தனக்கென புது பாணியை உருவாக்கிக்கொண்டார். ஸ்டிரைக்கர் என்று சொல்லப்படும் முன்கள ஆட்டக்காரருக்கு புதிய பரிமாணத்தை உருவாக்கித் தந்தவரும் ரொனால்டோ தான்…ஆனால்… அடுத்தடுத்து ஏற்பட்ட காயங்கள் அவரை கட்டிப்போட்டன. 1998ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கு பிறகு 3 ஆண்டுகள் வரை அவர் எந்த போட்டியிலும் விளையாடவில்லை.. அவரது கால்பந்து வாழ்க்கை முடிவுக்கு வந்ததாகவே பலரும் எண்ணினர்…

கனவு கோப்பையே கையில் ஏந்துவதே வாழ்நாள் லட்சியமாக கொண்டிருந்த ரொனால்டோ, தடைகளை உடைத்தெறிந்து மீண்டு வந்தார். கடந்த உலகக்கோப்பையில் அடைந்த ஏமாற்றத்தை போக்க, 2002ம் ஆண்டு உலகக்கோப்பையில் புது உத்வேகத்துடன் களம் கண்டார் ரொனால்டோ நசாரியோ…

தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளில் நடந்த அந்த உலகக்கோப்பை போட்டியில், பிரேசிலின் ரொனால்டோ, ரொனால்டினோ, ரிவால்டோ கூட்டணி எதிரணிகளை கதி கலங்கவைத்தது.

பங்கேற்ற அனைத்துப் போட்டிகளையும் எளிதில் வென்ற பிரேசில் அணி, இறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த ஜெர்மனியையும் வீழ்த்தியது.
அந்த போட்டியில் நட்சத்திரமாய் ஜொலித்த ரொனால்டோ நசாரியோ 2 கோல்கள் அடித்து பிரேசிலுக்கு 5வது கோப்பையை வென்றுகொடுத்தார்.

தொடரின் சிறந்த வீரர், ஆண்டின் சிறந்த வீரர் என பல மணிமகுடங்கள் ரொனால்டோவை அலங்கரித்தன…

ரொனால்டோ நசாரியோவை பற்றி ஒற்றை வார்த்தையில் கூறவேண்டும் என்றால் அவர் ஒரு ’அரக்கன்’ என்று சொல்லலாம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அஜய் மிஸ்ராவை பிரதமர் பதவி நீக்கம் செய்யாதது ஏன்? ராகுல் காந்தி

EZHILARASAN D

கோவை மருத்துவமனையில் கொரோனா கவச உடையுடன் முதல்வர் ஆய்வு!

Halley Karthik

வேதாரண்யம் அருகே மைல் கல்லுக்கு சிறப்பு அபிஷேகம் செய்த சாலைப் பணியாளர்கள்

G SaravanaKumar