உலகப் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
உலகப் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. இந்த தசரா திருவிழா 12 நாட்கள் விமர்சையாக நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் தினமும் அபிசேகம், இரவு அம்பாள் வீதி உலா நடைபெறும்.
மேலும் வருகிற 24-ம் தேதி சிகர நிகழ்ச்சியான சூரசம்காரம் நடைபெறுகிறது. இந்த நிலையில் கொடியேற்றத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்.
இந்த திருவிழாவை முன்னிட்டு 41, 21, 11 நாட்கள் விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் காப்பு கட்டி இன்று முதல் வேடமணிய தொடங்குவார்கள். பக்தர்கள் காளிவேடம், அம்மன், குரங்கு , குறவன் குறத்தி, உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் அணிந்து தர்மம் பெற்று கோவிலில் காணிக்காயாக செலுத்துவார்கள்.
கொடியேற்றத்தை முன்னிட்டு யானை மீது கொடிப்பட்டம் ஊர்வலம் நடைபெற்றது. மேலும் கொடிமரத்திற்கு சிறப்பு அபிசேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் ஓம் காளி, ஜெய் காளி பக்தி கோசம் முழங்க சுவாமி தரிசனம் செய்தனர்.
தசரா திருவிழா நிகழ்ச்சிகள் நியூஸ்7தமிழ் பக்தி யூடியூப் சேனலில் நேரடி ஒளிபரப்பாகிறது. நிகழ்ச்சிகளை காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்..







