ஐபோன் 15 ப்ரோ மேக்ஸை வாங்க பிச்சைக்காரன் வேடமிட்டு, மூட்டையில் சில்லறையுடன் வந்த இளைஞர்!… அதிர்ந்து போன ஊழியர்கள்….

இன்ஸ்டாகிராம் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், ஒரு பிச்சைக்காரன் போல் வேடமிட்டு ஒரு நபர் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் வாங்குவதற்காக ஒரு பையில் நிறைய நாணயங்களுடன் ஆப்பிள் ஸ்டோருக்கு…

இன்ஸ்டாகிராம் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், ஒரு பிச்சைக்காரன் போல் வேடமிட்டு ஒரு நபர் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் வாங்குவதற்காக ஒரு பையில் நிறைய நாணயங்களுடன் ஆப்பிள் ஸ்டோருக்கு வந்தார். ஆப்பிள் ஸ்டோர் ஊழியர்கள் கூட அந்த நபரைப் பார்த்ததும் திகைத்துப் போனார்கள்.

சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோவில் இதனை காணலாம். ஒரு நபர் தனது தோளில் நாணயங்கள் நிறைந்த பையை சுமந்து கொண்டு ஒரு கடைக்குள் நுழைகிறார். கடையில் இருந்த ஊழியர்கள் அந்த நபரின் உடையை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். உண்மையில், வீடியோவில் காணப்படும் இளைஞன் கிழிந்த  லுங்கியுடன் கடைக்குள் நுழைகிறார்.

இளைஞரின் உடலில் தூசி படிந்துள்ளது.  அந்த இளைஞன், கடை ஊழியர்களிடம் iPhone 15ProMax போனைக் காண்பிக்கச் சொல்லி, அதை வாங்குவது பற்றிப் பேசுகிறான். காசுகள் நிரம்பிய பையை கீழே போட்டுவிட்டு காசுகளை தரையில் கொட்டுகிறார். ஆப்பிள் ஊழியர்கள் நாணயங்களை எண்ணத் தொடங்குகிறார்கள். எண்ணிக்கை முடிந்ததும் அந்த இளைஞருக்கு ஐபோன் வழங்கப்பட்டது. கடைசியில் அந்த இளைஞன் அங்கிருந்து காரில் புறப்பட்டார்.

https://www.instagram.com/reel/CyBJ6s6PJZw/?utm_source=ig_embed&ig_rid=030abbcf-b218-47f7-b31c-a8b5b2b2e0e4

இந்த வீடியோ இதுவரை 34 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது. இந்த வீடியோவுக்கு சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் பல கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். கடந்த மாதம்தான் ஆப்பிள் புதிய ஐபோன் சீரிஸ் ஐபோன் 15 ஐ அறிமுகப்படுத்தியது.  இந்தியாவில் இதன் விற்பனை செப்டம்பர் 22 முதல் தொடங்கியுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.