டேய்!.. நான் பாம்பு டா கொஞ்சமாச்சும் பயப்படு டா… வைரலாகும் குரங்கின் செயல்!…

சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இந்த காணொளியில் குரங்கு நாகப்பாம்பிடம் எப்படி பதற்றமடையாமல் இருக்கிறது என்பதை பார்க்கலாம். அதிர்ச்சியூட்டும் வனவிலங்கு வீடியோக்கள் @wildliveplante இன் Instagram கணக்கில் அடிக்கடி வெளியிடப்படுகின்றன. சமீபத்தில், இந்த கணக்கில்…

சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இந்த காணொளியில் குரங்கு நாகப்பாம்பிடம் எப்படி பதற்றமடையாமல் இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
அதிர்ச்சியூட்டும் வனவிலங்கு வீடியோக்கள் @wildliveplante இன் Instagram கணக்கில் அடிக்கடி வெளியிடப்படுகின்றன. சமீபத்தில், இந்த கணக்கில் ஒரு குரங்கும் நாகப்பாம்பும் நேருக்கு நேர் எதிர்கொள்ளும் வீடியோ பகிரப்பட்டது. ஒரு நாகப்பாம்பு எவ்வளவு ஆபத்தானது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
கரடி, புலி போன்ற  பெரிய விலங்குகள் கூட அதன் முன் நிற்க முடியாது. அப்போது குரங்கின் கதி என்னவென்று யோசியுங்கள். ஆனால் இந்த வீடியோவைப் பார்த்தால், குரங்கு பயப்படுவதுபோல் தெரியவில்லை. வைரலான வீடியோவில் குரங்கு மரத்தில் ஏறி எதையோ சாப்பிட முயல்வதை காணலாம்.
அதற்க்கு அருகில் ஒரு நாகப்பாம்பு உள்ளது.  அந்த பாம்பு படமெடுத்து குரங்கைக் கடிக்க முயல்கிறது. ஒருமுறை அவன் குரங்கைத் தாக்கினாலும், குரங்கு அவனைத் தன் கையால் தள்ளிவிட்டு மீண்டும் சாப்பிடத் தொடங்குகிறது.  வீடியோ 63 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது மேலும் பலர் தங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்து வருகின்றனர்.
முழு வீடியோ:  https://www.instagram.com/p/CyJQHDGRaom/
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.