முக்கியச் செய்திகள் உலகம் கட்டுரைகள்

2K கிட்ஸின் மொழி எமோஜி: உலக எமோஜி தினம்


எல்.ரேணுகாதேவி

கட்டுரையாளர்

இயந்திரம்போல் சுற்றிக்கொண்டிருக்கும் மனிதர்களின் வாழ்வில், உணர்ச்சிகளின் வெளிப்பாடாக மாறியிருக்கின்றன எமோஜிக்கள்…

உலகமே கையடக்க செல்போனில் அடங்கிவிட்டது என்பதை நாம் எந்தளவிற்கு ஏற்றுக் கொள்கிறோமோ, அதே அளவிற்கு செல்போனுக்குள் நாம் மூழ்கிவிட்டோம் என்பதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

உணர்ச்சிகளின் வெளிப்பாட்டு மொழி

பரபரப்பாக சுழன்றுகொண்டிருக்கும் வாழ்க்கையில், வார்த்தைகளுக்கே இடமில்லாமல் போய்விட்டது. நீங்கள் என்ன மனநிலையில் இருக்கீறிர்கள் என்பதை, வார்த்தைகளால் சொல்லமுடியாதபோது, உங்களுடைய ஒரு சிறு எமோஜி நீங்கள் செல்லவரும் விஷயத்தை வெளிப்படுத்திவிடுகிறது.

உங்களுடைய மகிழ்ச்சியை, சோகத்தை, கோபத்தை, காதலை, அழுகையை, ஏக்கத்தை, காத்திருப்பை, மனதிற்குப் பிடித்தவர்களிடம் பேசி புரியவைக்க முடியாத விஷயங்களை, ஆழமான அர்த்தத்துடன் புரியவைத்து செல்கின்றன எமோஜிக்கள்.

ஆதி மனிதனின் குகை ஓவியமே இன்றைய ‘எமோஜி’

அதனால்தான் அனைவருக்கும், எமோஜிக்களை பயன்படுத்துவது சுலபமாக உள்ளது. ஜப்பானியர்களின் சித்திர எழுத்துகள்தான், எமோஜிக்கு முன்னோடி என்றழைக்கப்படுகிறது. ஆனால் ஆதி மனிதன் வரைந்த, அற்புதமான குகை ஓவியங்கள்தான், நாகரிக வளர்ச்சியடைந்து, நாம் பயன்படுத்தும் எமஜிக்களாக உருமாறியுள்ளது எனலாம்.

இன்றைய 2கே தலைமுறையினரின், மாற்று மொழியாக மாறிவிட்டன எமோஜிக்கள். எழுதத் தெரியாத குழந்தைகள் கூட, எமோஜிக்களை எளிதாக புரிந்துகொள்கின்றன. பாட்டி செல்லும் பிறந்தநாள் வாழ்த்துக்கு ஸ்மெலி பொம்மையும், ஆன்லைனில் பாடம் எடுக்கும் ஆசிரியைக்கு ஆங்கிரி பொம்மையும் எளிதாக அவர்களால் அனுப்பிவிடமுடியும்.

1988-ம் ஆண்டு ஜப்பானைச் சேர்ந்த எண்டிடி டொகொமோ நிறுவனம்தான், எமோஜிக்களுக்கு செயல்வடிவம் கொடுத்தது. அந்நிறுவனத்தில் பணிபுரிந்த ஷிகேடிகா குரிடா என்பவர் எமோஜிக்களை உருவாக்கினார். தொடக்கத்தில் 180 விஷயங்களைத் தேர்வு செய்து, அதனை எமோஜிக்களாக ஷிகேடிகா உருவாக்கினார். தற்போது ஒவ்வொரு மொபைல் கீ போர்டுகளுக்கும் ஏற்றவகையில் நூற்றுக்கும் மேற்பட்ட எமோஜிக்கள் உள்ளன.

உலகின் நவீன மொழி எமோஜி

இந்த எமோஜிக்களுக்கு பாட்டன் என்றால் அது எமோட்டிக்கான்தான், இதில் நம் கீபோர்டில் இருக்கும் சிறப்பு கேரக்டர்கள் வைத்தே, நமது எக்ஸ்பிரஷனை கொண்டுவரலாம். இதுபோல குறிப்பிட்ட சில உணர்ச்சிகளை மட்டும், எமோட்டிகானில் கொண்டு வரமுடியும்.

 

ஒவ்வொரு ஆண்டும் புது புது எமோஜிக்கள் வெளியிடப்படுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு NINJA, Father Parenting, நிறவெறிக்கு எதிராக கைகொடுக்கும் குறியீடு உள்ளிட்டவை வெளியாக உள்ளது. மொழிகளுக்கு மாற்றாகத்தான் எமோஜிக்கள் அறிமுகம் செய்யப்பட்டது. உலகின் எந்த நாட்டுக்காரரும், எந்த மொழி பேசுபவரும் புரிந்துக் கொள்ளும் மொழியாக எமோஜிக்கள் உள்ளன. உலகின் யூனிவர்சல் மொழியாக எமோஜிக்கள் மாறிவிட்டது. ஹைக்கூ கவிதைகளை அறிமுகப்படுத்திய ஜப்பானியர்கள், இன்றைக்கு எமோஜிக்களை உருவாக்கி, எமோஜியில் கவிதைகள் உருவாக்க கற்றக்கொடுத்துள்ளனர்.

எமோஜிக்கு மாற்றாக Gif, Sticker என பல விஷயங்கள் வந்தாலும், இப்போது எமோஜிக்கள்தான் உலகின் நவீன மொழி… எதிர்காலத்தில் Gif, Stickerகளும் மேம்படுத்தப்படும், அவை 3கே, 4 கே கிட்ஸ்களின் மொழியாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

 

Advertisement:
SHARE

Related posts

தென் தமிழகத்தில் நாளை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

Niruban Chakkaaravarthi

பொது இடங்களில் அனுமதி பெறாத சிலைகள் அகற்றப்படுமா? நீதிமன்ற உத்தரவு

Halley karthi

ஐ.பி.எல் : சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி டெல்லி அபார வெற்றி

Ezhilarasan