நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 38,079 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 560 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. ஆக்ஸிஜன் பற்றாக் குறை, அதிக உயிரிழப்புகள் என்று கொரோனாவின் தொற்றால் இந்திய மருத்துவ அமைப்பு பெரும் சவாலை சந்தித்தது.
இந்நிலையில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலையின் வேகம் குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 38,079 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 560 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இதுவரை 4,13,091 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளனர். மேலும் நேற்று ஒரு நாளில் 43,916 பேர் கொரோனாவிலிருந்து குணமாகி உள்ளனர்.
இதன் மூலம் இதுவரை 3,02,27,792 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் தற்போது 4,24,025 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவிலிருந்து மீண்டவரிகளின் சதவிகிதம் 97.31 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதிலும் இதுவரை மொத்தம் 39,96,95,879 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 42,12,557 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.







