பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கேரளாவில் கொரோனா ஊரடங்கு காரணமாக திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் மட்டும் கடைகளை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இன்று தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் மூன்று நாட்களுக்கு கூடுதல் தளர்வுகள் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்களில் கொரோனா தொற்று குறைவாக உள்ள பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களான பலசரக்கு, பழம், காய்கறி, மீன், இறைச்சி, பேக்கரி கடைகளுடன் துணிக்கடைகள், செருப்பு, நகை கடைகள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கடைகள் ஆகியவை இரவு 8 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.







