முக்கியச் செய்திகள் செய்திகள் விளையாட்டு

உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்று இன்று தொடக்கம்: ஆஸ்திரேலியா – நியூசிலாந்து மோதல்

உலகக்கோப்பை கிரிக்கெட்டின் சூப்பர் 12 சுற்று இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில், ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

 

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், நேற்றுடன் முதல் சுற்று நிறைவடைந்தது. முதல் சுற்று முடிவில் இலங்கை, நெதர்லாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய அணிகள் சூப்பர்12 சுற்றுக்கு முன்னேறி மற்ற 8 அணிகளுடன் இணைந்தன. சூப்பர்12 சுற்றில் 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப்1-ல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், இலங்கை, அயர்லாந்து ஆகிய அணிகளும் குரூப்2-ல் இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், ஜிம்பாப்வே, நெதர்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்குள் நுழையும். அதன் படி இன்று நடைபெறும் சூப்பர்12 சுற்றின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் சிட்னியில் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆனால் சிட்னியில் மழைக்கு வாய்ப்பு இருப்பதால் போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்திய நேரப்படி பகல் 12.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. அதேபோல் மற்றொரு ஆட்டம் பெர்த்தில் நடைபெறுகிறது. மாலை 4.30 மணிக்கு தொடங்கும் அந்த ஆட்டத்தில், இங்கிலாந்து அணி – ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதற்கு முன்பு நேருக்கு நேர் சந்தித்த இரு ஆட்டங்களிலும் இங்கிலாந்தே அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இலங்கை அதிபரின் வீட்டைக் கொளுத்திய போராட்டக்காரர்கள்

Halley Karthik

ஐபிஎல் தொடரில் இருந்து நடராஜன் விலகல்?

Halley Karthik

எனது வெற்றி மாற்று அரசியலுக்கான வெற்றி : சீமான்!

G SaravanaKumar