கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரேஷியாவிற்கு எதிரான இன்றைய
அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கத்தார் உலக கோப்பை கால்பந்து தொடர் இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கின்றது. இன்று நடைபெற உள்ள முதல் அரையிறுதி ஆட்டத்தில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டின அணியும், லூகா மோட்ரிச் தலைமையிலான குரேஷியா அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியில் அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரரும், கேப்டனுமான மெஸ்ஸி விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
முன்னதாக நெதர்லாந்து அணிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் மைதானத்தில் நடுவர்
அன்டோனியோ மேட்யூ லாஹோஸ் உடன் வாக்குவாதம் செய்ததன் காரணமாக மெஸ்ஸி, இன்றைய அரையிறுதி போட்டியில் விளையாடுவதற்கு இடைநீக்கம் செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அர்ஜெண்டின வீரர்கள் மற்றும் அந்நாட்டு கால்பந்து சங்கத்தின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஃபிஃபா முடிவு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஃபிஃபா ஒழுங்கு நடவடிக்கை குழு கொடுக்கும் அறிக்கையை பொறுத்து மெஸ்ஸி இன்று விளையாடுவது தெரிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஃபிஃபா ஒழுங்கு நடவடிக்கையை பொறுத்தே மெஸ்ஸி அரையிறுதியில் விளையாடுவது குறித்து உறுதியாகும் என்ற பட்சத்தில், ரசிகர்கள் மத்தியில் இது குறித்து கேள்வி எழுந்துள்ளது.







