பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ராஜா படேரியாவை மத்திய பிரதேச போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் அமைச்சருமான ராஜா படேரியா, பன்னா மாவட்டத்தில் உள்ள பவாய் என்ற நகரத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் நேற்று பேசினார். அப்போது, “மோடி தேர்தல்களுக்கு முடிவு கட்டி விடுவார். மோடி மதம், சாதி, மொழியின் பெயரால் பிளவுபடுத்துவார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது. நீங்கள் அரசியல் சாசனத்தை காப்பாற்ற வேண்டும் என்று விரும்பினால், மோடியைக் கொல்வதற்கு தயாராகுங்கள். அவரை வீழ்த்துவதாக கருதி கொல்லுங்கள் என்று அவர் கூறியிருந்தார். அவரது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து மத்தியபிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஷ்ரா, இதுதொடர்பாக ராஜா படேரியாவை மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதையடுத்து பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ராஜா படேரியா மீது மத்தியப்பிரதேச அரசு வழக்கு பதிவு செய்தது. இந்த நிலையில் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் ராஜா பட்டேரியா கைது இன்று செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக இந்த வீடியோ குறித்து ராஜா பட்டேரியா தன்னிலை விளக்கம் அளித்து ஒரு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறுகையில், பவாயில் நடந்த கூட்டத்தில் பேசியது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. நான் மகாத்மா காந்தியைப் பின்பற்றுபவன். நான் யாரையும் கொல்ல வேண்டும் என்று கூற மாட்டேன். அரசியல் சாசனத்தையும், தலித்துகளையும், பழங்குடியினரையும், சிறுபான்மையினரையும் பாதுகாக்க மோடியை வீழ்த்துங்கள் என்று தான் நான் பேசினேன் என்று அதில் அவர் கூறியிருந்தார்.