முக்கியச் செய்திகள் இந்தியா

எல்லையில் இந்தியா-சீன வீரர்கள் மோதல்; அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கம்

தவாங்கில் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்து  நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கமளித்துள்ளார்.

இந்திய-சீனாவின் எல்லைப்பகுதியின் அருகே அருணாச்சல மாநிலம் அமைந்துள்ளது. இங்கு சீனா படைகள் தொடர்ச்சியாக ஆக்கிரமிப்பு செய்ய முயன்று வருகிறது. எனவே இருநாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே எப்போதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் அருணாச்சலபிரதேசத்தின் தவாங் பகுதி அருகே உள்ள எல்லை பகுதியில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி ஊடுருவி வேலி அமைத்ததாக கூறப்படுகிறது. இதனை சீன வீரர்களின் இந்த முயற்சியை இந்திய ராணுவ வீரர்கள் முறியடித்துள்ளனர்.

300க்கும் மேற்பட்ட சீன ராணுவவீரர்கள் மேற்கொண்ட முயற்சி இந்திய வீரர்களால் முறியடிக்கப்பட்டது. இதில் 6 இந்திய வீரர்கள் காயமடைந்ததாகவும், சீன தரப்பில் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் கடந்த 9ம் தேதி நடந்ததாகக் கூறப்படுகிறது.

அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதியில் இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே நடந்த மோதலின் செயற்கைக்கோள் படம் வெளியாகி உள்ளது. தவாங் எல்லைக்கு அருகில் சீனா கிராமங்களை அமைத்திருப்பதை புகைப்படத்தில் காணலாம். அதுமட்டுமின்றி அந்தப் பக்கத்தில் சாலையையும் சீன ராணுவம் அமைத்துள்ளது.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கமளித்துள்ளார். அதில், டிசம்பர் டிசம்பர் 9ம் தேதி தவாங் பகுதியில் உள்ள யாங்லி செக்டரில் சீனராணுவம் அத்துமீற நுழைய முயன்றது. இதை துணிச்சலுடன் எதிர்கொண்ட இந்திய ராணுவம் அத்துமீறலை தடுத்து நிறுத்தியது.

அப்போது, இந்திய-சீன ராணுவ வீரர்களிடையே ஏற்பட்ட மோதலால் இரு தரப்பிலும் சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதில், நமது வீரர்கள் யாரும் உயிரிழக்கவோ, பலத்த காயமடையவோ இல்லை. இந்திய ராணுவ கமெண்டர்கள் சரியான நேரத்தில் இந்த பிரச்னையில் தலையிட்டதால், உடனடியாக சீன ராணுவத்தினர் பின் வாங்கினர்.

பின்னர், டிசம்பர் 11ம் தேதி இரு நாட்டு கமெண்டர்களும் சுமூக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பிரச்னையில் எல்லையில் அமைதி காக்கப்படும் என சீன தரப்பும் தெரிவித்துள்ளது என்று கூறினார்.

இந்த பிரச்னை குறித்து விவாதிக்க அவைதலைவர் அனுமதி அளிக்காததால், மக்களவையில் இருந்து எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கவனம் ஈர்க்கப்படும் கேரள தேர்தல்!

சென்னை: ரயில் முன்பு தள்ளிவிட்டு கல்லூரி மாணவி கொலை- காதல் விவகாரத்தில் கொடூரம்

EZHILARASAN D

கோடநாடு விவகாரம்: அதிமுக கூட்டணி எம்.எல்.ஏக்கள் தர்ணா

Gayathri Venkatesan