முக்கியச் செய்திகள் விளையாட்டு

இந்தியா-வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்

இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன்படி இந்தியா- வங்கதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் உள்ள ஜாஹூர் அகமது ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஒரு நாள் தொடரில் முதல் இரு ஆட்டங்களில் சொதப்பினாலும் கடைசி ஆட்டத்தில் இஷான் கிஷனின் இரட்டை சதமும், விராட் கோலியின் சதமும் இந்தியாவுக்கு 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தேடித்தந்தது. அதே உத்வேகத்துடன் டெஸ்ட் தொடரை நமது வீரர்கள் எதிர்கொள்கிறார்கள்.

கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக விலகியதால் கே.எல்.ராகுல் கேப்டனாக அணியை வழிநடத்துகிறார். வங்கதேச ஏ அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு சதங்கள் அடித்த புதுமுகம் அபிமன்யு ஈஸ்வரன் பெயரும் பரிசீலனையில் உள்ளது.

பந்துவீச்சில் பும்ரா, முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா ஆகிய முன்னணி பவுலர்கள் இல்லாத நிலையில் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், அக்‌ஷர் பட்டேலைத் தான் அணி மலைபோல் நம்பி உள்ளது. 5-வது பவுலர் இடத்திற்கு சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ், சவுரப் குமார், ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்குர், ஜெய்தேவ் உனட்கட் ஆகியோரில் ஒருவருக்கு இடம் கிடைக்கும்.

இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது. எனவே இந்த போட்டி இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானதாகும். டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்தியா 52.08 சதவீத புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவுக்கு இன்னும் 6 டெஸ்ட் போட்டிகள் மீதம் உள்ளன. இவற்றில் குறைந்தது 5-ல் வெற்றி பெற்றால் தான் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும்.

இந்த போட்டியில் இந்திய அணியில், லோகேஷ் ராகுல் (கேப்டன்), சுப்மான் கில் அல்லது அபிமன்யு ஈஸ்வரன், புஜாரா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட், அஸ்வின், அக்‌ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

வங்கதேச அணியில், மக்முதுல் ஹசன் ஜாய், ஜாகிர் ஹசன், நஜ்முல் ஹூசைன் ஷன்டோ, முஷ்பிகுர் ரஹிம், ஷகிப் அல்-ஹசன் (கேப்டன்), லிட்டான் தாஸ், நுருல் ஹசன், மெஹிதி ஹசன் மிராஸ், ஷோரிபுல் இஸ்லாம், கலித் அகமது, எபாதத் ஹூசைன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் 3, 4, 5 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இது பெரியார் கண்ட கனவு; முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

G SaravanaKumar

நாடாளுமன்ற தேர்தல்: பாஜகவை எதிர்க்க காங்கிரஸ் கட்சியினர் தயாராக இருக்க வேண்டும் – சசிதரூர் பேட்டி

EZHILARASAN D

டி20 உலக கோப்பை; டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு

G SaravanaKumar