உலகக்கோப்பை அரையிறுதி – ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்!!

உலகக்கோப்பை அரையிறுதி போட்டியின் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 2023 உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் போட்டிகள் நிறைவுற்ற நிலையில் அரையிறுதியின்…

உலகக்கோப்பை அரையிறுதி போட்டியின் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

2023 உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் போட்டிகள் நிறைவுற்ற நிலையில் அரையிறுதியின் முதல் நாக் அவுட் போட்டியில் முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணி, புள்ளிப்பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ள நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது.

விராட் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் அய்யரில் சதம் மற்றும் முகமது ஷமியின் பந்துவீச்சும் சேர்ந்து இந்திய அணிக்கு அபாரமான வெற்றியை பெற்றுத்தந்தது. அதிலும் விராட் கோலி தனது 50-ஆவது சதத்தை இப்போட்டியில் பூர்த்தி செய்ததன் வாயிலாக வரலாறு படைத்தார். மேலும் ஒரு உலக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்தவர் என்கிற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆனார். இதே போன்று முகமது ஷமி ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்கிற பெருமையை தட்டிச்சென்றார். இந்நிலையில், இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதனை தொடர்ந்து இன்று அரையிறுதிப் போட்டியின் இரண்டாம் போட்டி இன்று மதியம் கொல்கத்தாவில் தொடங்கியது.

இதில் ஆஸ்திரேலிய அணியும், தென்னாப்பிரிக்க அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக்கும், பவுமாவும் களம் இறங்கினர். இதில் அணியின் கேப்டனான பவுமா 4 பந்துகளை சந்தித்த நிலையில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். இதனை அடுத்து டி காக்கும் 14 பந்துகளை சந்தித்த நிலையில் 3 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.

இந்நிலையில் 10 ஓவர்கள் முடிவில் 18 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து  தென்னாப்பிரிக்க அணி தடுமாற்றத்துடன் விளையாடி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.