ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவையும் 90 நிமிடங்கள் தீர்மானிக்கும் போது, அதில் கிடைக்கும் வெற்றியை மட்டும் ஒருநாள் முழுவதும் கொண்டாடாமல் இருந்தால் எப்படி..
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரூப் சுற்றுகளில் இருந்து, அடுத்த கட்டமான, ரவுண்ட் ஆப் 16-க்குள் நுழையும் வாழ்வா சாவா ஆட்டத்தில், நேற்று 8 அணிகள் பலப்பரீட்சை நடத்தின. செனகல் ஈக்வடார் அணியையும், நெதர்லாந்து கத்தார் அணியையும், ஈரான் அமெரிக்காவையும், இங்கிலாந்து வேல்ஸ் அணியையும் எதிர்கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த உலகக் கோப்பை தொடரில் சர்ப்ரைஸ் கொடுத்துக் கொண்டு இருக்கும் செனகல் அணி, நேற்று ஈக்வடார் அணியை வீட்டுக்கு அனுப்பிய பிறகு, செனகல் அணி ரசிகர்களின் கொண்டாட்டம் உச்சத்தில் இருந்தது. செனகல் அணி உலகக்கோப்பையில், நாக் அவுட் சுற்றுக்கு இரண்டாவது முறையாக முன்னேறியுள்ளது.
நெதர்லாந்து அணி கத்தாரை விடாமல் அடித்து துவம்சம் செய்ததால், அங்கு நெதர்லாந்து ரசிகர்களின் கொண்டாட்டத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. கத்தார், இந்த உலகக்கோப்பை தொடரை, பல லட்சம் கோடி செலவில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தி வந்தாலும், உலக கோப்பை வரலாற்றிலேயே, போட்டிகளை நடத்தும் ஒரு அணி குரூப் சுற்றின் 3 போட்டிகளிலுமே தோல்வியை சந்தித்து வெளியேறியது என்ற மோசமான பெயரையும் பெற்றுள்ளது.
ஈரானுடன் விளையாடிய அமெரிக்கா வெற்றி பெற்றதை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்ததுதான் அவர்கள் வெற்றி பெற்றதுக்கான சிறப்பே. இந்த வெற்றியை துள்ளிக் குதித்து கொண்டாடினர் அமெரிக்க கால்பந்து ரசிகர்கள்.
92 வருட வரலாறில் அதிக அளவிலான ரசிகர்களை வைத்திருக்கும் இங்கிலந்து அணியின் வெற்றியை, அவர்களுடைய ஸ்டைலில் கொண்டாடினர் இங்கிலாந்து ரசிகர்கள். இந்த வெற்றியின் மூலமாக, ரவுண்ட் ஆப் 16க்கு இங்கிலாந்து முன்னேறியுள்ளது.