முக்கியச் செய்திகள் விளையாட்டு

உலக கோப்பை கால்பந்து: இன்று ஒரே நாளில் 4 போட்டிகள்

உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று ஒரே நாளில் 4 போட்டிகள் நடைபெற உள்ளது.

22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத்தொடரில் இன்று 4 ஆட்டங்கள் நடைபெறுகிறது. அதில் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு நடைபெறும் அர்ஜென்டினா, சவுதி அரேபியா அணிகள் மோதுகின்றன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பட்டம் வெல்ல தகுதியுள்ள அணிகளில் ஒன்றான அர்ஜென்டினா அணிக்கு லயோனல் மெஸ்சி கேப்டனாக செயல்பட உள்ளார். இவ்விரு அணிகளும் இதுவரை 4 சர்வதேச போட்டிகளில் நேருக்கு நேர் இவ்விரு அணிகளும் சந்தித்துள்ளன. இதில் 2 போட்டிகளில் அர்ஜென்டினா வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டிகள் டிரா ஆனது.

இதையடுத்து டி பிரிவில் மாலை 6.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் டென்மார்க்-துனிசியா அணிகள் மோதுகின்றன. இதுவரை ஒரே ஒரு சர்வதேச போட்டியில் இவ்விரு அணிகளும் மோதியுள்ளன. இந்த ஒரு ஆட்டத்திலும் டென்மார்க் அணியே வெற்றி பெற்றுள்ளது.

இதையடுத்து இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் மெக்சிகோ, போலந்து அணிகள் விளையாடுகின்றன. இவ்விரு அணிகளும் இதுவரை 8 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் இரு அணிகளும் தலா 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. மற்ற 2 போட்டிகளும் டிரா ஆனது.

 

நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இதுவரை 5 முறை இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் பிரான்ஸ் அணி 3 முறையும், ஆஸ்திரேலியா அணி 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டிரா ஆனது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மறுபடியுமா? 4வது முறையாக மாடு மீது மோதி சேதமடைந்த வந்தே பாரத் ரயில்

G SaravanaKumar

மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் பழனிசாமி சவால்!

Niruban Chakkaaravarthi

ஆடர் செய்தது ஐஸ்கிரீம்; வீட்டிற்கு வந்தது என்ன தெரியுமா?

Arivazhagan Chinnasamy