பிரதமர் மோடி நேற்று நடைபெற்ற தசரா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகளையில், கடந்த 12 ஆண்டுகளாகத் தனது அரசாங்கத்தின் வளர்ச்சித் திட்டங்களில் ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களின் நலனே முதன்மையான கவனமாக இருந்து வருகிறது என்று குறிப்பிட்டார். மேலும், கோடிக்கணக்கான இந்தியர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும், அவர்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தவும் நோக்கமாகக் கொண்ட பல்வேறு முக்கியத் திட்டங்களையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில் ஏழைகள் குறித்து பிரதமர் பேசியிருப்பதை படித்தவுடன் சிரித்துவிட்டேன் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, “ஏழைகள் மற்றும் விளிம்பு நிலையில் உள்ள மக்களின் நலனே அரசின் முதன்மையான பணி — இப்படிக் கூறியிருப்பது கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் அல்ல; நேற்று தசரா விழாவில் பிரதமர் மோடி அவர்கள்தான் இப்படிப் பேசியுள்ளார்.
படித்தவுடன் சிரித்துவிட்டேன். ‘ஏழைகள், விளிம்பு நிலை மக்கள்’ என்று வார்த்தை அளவிலாவது சொன்னதற்காகப் பிரதமரைப் பாராட்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.




